U19 உலகக்கிண்ணம் - 191 ஓட்டங்கள் குவித்து வரலாறு படைத்த இங்கிலாந்து வீரர்
U19 உலகக்கிண்ண தொடர் , ஜனவரி 15 ஆம் திகதி தொடங்கி, பிப்ரவரி 6 ஆம் திகதி வரை ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற 17வது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதியது.

Credit X.com/ZimCricketv
நாணய சுழற்சியில் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 404 ஓட்டங்கள் குவித்தது.
பென் மேயஸ்
இதில், அதிகபட்சமாக பென் மேயஸ்(Ben Mayes), 117 பந்துகளில் 18 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 191 ஓட்டங்கள் குவித்தார்.

Credit : icc.com
இதன் மூலம், U19 உலகக்கிண்ண தொடரில் இங்கிலாந்து அணிக்காக அதிகபட்ச ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பென் மேயஸ்.
இது ஒட்டுமொத்த U19 உலகக்கிண்ண தொடரில் 2வது தனிநபர் அதிகபட்ச ஓட்டமாகும். இலங்கை வீரர் ஹசிதா போயகோடா, ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 192 ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

Credit : x.com/lancscricket
மேலும், இங்கிலாந்து அணி 404 ஓட்டங்கள் குவித்துள்ளது, U19 உலகக்கிண்ண வரலாற்றில் ஒரு அணியின் 6வது அதிகபட்ச ஓட்டமாகும்.
405 என்ற வெற்றிவெற்றி இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, 30 ஓவர்களில் 103 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, 7 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |