எடை இழப்பு முதல் டீடாக்ஸ் வரை.. எலுமிச்சை நீரில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Benefits of Lemon Water: காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிக்கும் பழக்கம் தற்பொழுது பலரிடம் காணப்படுகிறது.
ஆயுர்வேதம் மற்றும் ஊட்டச்சத்து ஆகிய இரு துறைகளை சார்ந்த நிபுணர்களும் இப்பழக்கம் உடலுக்கு நன்மை கொடுக்க கூடியது என்று கருதுகின்றனர். எலுமிச்சை நீரில் உள்ள வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை உடலை உள்ளிருந்தே தூய்மைப்படுத்தவும் உடலை எப்போதும் ஆற்றலுடன் வைத்திருக்கவும் உதவுகிறது.

நாமும் எப்பொழுதும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த பழக்கத்தை நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வரலாம்.
உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது:
நாம் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கிறது. அதில் முதலாவதாக உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற எலுமிச்சை நீர் உதவுகிறது.
காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது கல்லீரலின் செயல்பாடு தூண்டப்படுவதோடு உடலின் இயற்கையான சுத்திகரிப்பு செயல்முறைகளையும் வேகப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக நம்முடைய சருமம் பொலிவுடன் தெளிவானதாகவும் உள்ளது.
செரிமான மண்டலத்தை வலுப்படுத்துகிறது:
ஒருவருக்கு வாயு தொல்லை நெஞ்செரிச்சல் அல்லது மலச்சிக்கல் போன்ற செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் வந்து அடிக்கடி அவதிப்படுபவர் என்றால் அவர்களுக்கு வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் மிகவும் கை கொடுக்கும். இது செரிமான நொதிகளை தூண்டி உணவை விரைவாக செரிமானம் செய்ய பெரிதும் உதவுகிறது.

எடை இழப்பிற்கு உதவுகிறது:
உடலில் உள்ள கூடுதல் எடையை குறைப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கிறது. எலுமிச்சை நீர் உடலின் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்க செய்து அவை நாம் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. அதனால், தினமும் தவறாமல் இதை பருகி வருகின்ற பொழுது காலப்போக்கில் உடல் எடை படிப்படியாக குறைய தொடங்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, சளி இருமல் மற்றும் பல்வேறு வகையான தொற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தைகுறைகிறது. மேலும், நம் உடலை உள்ளிருந்தே வலிமையாகவும் உறுதியாகவும் மாற்றுகிறது. சரும பொலிவிற்கு பெரிதும் உதவிகிறது.
எலுமிச்சை நீரின் நன்மைகள்:
எலுமிச்சை நீர் உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது. அதோடு முகத்திற்கு ஒரு இயற்கையான பொழுவையும் முகப்பரு போன்ற சருமப் பிரச்சனைகளையும் குறைக்க உதவுகிறது. ஆதலால் தினமும் காலையில் பருகி வரும் பொழுது நல்ல மாற்றம் கிடைக்கும்.