ஒயின் குடிப்பதால் கொரோனா வைரஸ் குணமாகுமா?ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்
ரெட் ஒயின் குடிப்பதால் கொரோனா வைரஸ் குணமாகும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக மக்கள் உணவில் இருந்து வாழ்க்கை முறை போன்றவற்றில் கவனமாக உள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் விஷயங்களை பற்றி அறிந்து கொள்வதிலும் ஆர்வமாக உள்ளனர். தற்போது கொரோனா காலத்தில் மதுபானம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் ரெட் ஒயின் அருந்துபவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.
ரெட் ஒயின் நோய்த்தொற்றின் அபாயத்தை 17 சதவீதம் குறைக்கிறது என ஆய்வு கூறுகிறது. வாரத்திற்கு 5 அல்லது அதற்கு மேற்பட்ட க்ளாஸ் ரெட் ஒயின் குடிப்பதால் கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்கும் அபாயம் 17 சதவீதம் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் மக்களின் குடிப்பழக்கம் மற்றும் அவர்களில் உள்ள கொரோனா வரலாறு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததாக பிரிட்டிஷ் இணையதளம் தெரிவித்துள்ளது. இதில் ரெட் ஒயினில் உள்ள பாலிஃபீனால் என்ற பொருள் காய்ச்சல் போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது.
இதனால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயமும் குறைகிறது. வாரத்திற்கு 1 முதல் 4 கிளாஸ் ஒயிட் ஒயின் அல்லது ஷாம்பெயின் அருந்துபவர்கள், கோவிட் நோய்த்தொற்றின் அபாயத்தை 8 சதவீதம் குறைக்கின்றது.