வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி விபரீத முடிவு! ரூ 50 லட்சம் கொடுத்தும் தொல்லை தந்த கணவர்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர், வரதட்சணை கொடுமையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐடி ஊழியர்
கர்நாடகாவின் பெங்களூருவில் ஐடி ஊழியராக பணியாற்றி வந்தவர் ஷில்பா (27). இவருக்கும் பிரவீன் என்பவருக்கும் திருமணமாகி, ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.
பிரவீன் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு உணவாக தொழில் தொடங்கி நடந்தி வந்துள்ளார். ஷில்பா, பிரவீன் திருமணத்தின்போது பெண் வீட்டார் தரப்பில் இருந்து ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனாலும், பிரவீன் தனது மனைவியிடம் கூடுதலாக ரூ.10 லட்சம் கேட்டதாகவும், ஷில்பாவும் தன் குடும்பத்திடம் இருந்து அந்த பணத்தை பெற்றுக்கொடுத்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், கர்ப்பிணியாக இருந்த ஷில்பா பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வரதட்சணை கொடுமை
வரதட்சணை துன்புறுத்தலால் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிய வந்த நிலையில், ஷில்பாவின் கணவர் பிரவீனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரவீனின் குடும்பத்தினர் திருமணத்திற்கு முன்பு ரூ.15 லட்சம் ரொக்கம், 150 கிராம் தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கேட்டதாகவும், அவற்றை செய்துகொடுத்த பின்னும் ஷில்பாவை பலமுறை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஷில்பாவின் மாமா சென்னபசய்யா கூறுகையில், "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அவளுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்தோம். எங்கள் வீட்டை விற்று திருமணத்திற்காக ரூ.40 லட்சம் செலவிட்டோம். திருமணத்தின்போது 160 கிராம் தங்க நகைகளையும் கொடுத்தோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |