கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திக் கொண்ட பெண்: வறுத்தெடுக்கும் இணையவாசிகளின் கமெண்ட்டுகள்
பெங்களூரு நகரை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் பெயரை நெற்றியில் பச்சை குத்திக்(tattoo) கொள்ளும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
கணவரின் பெயரை பச்சை குத்திக் கொண்ட பெண்
பொதுவாக தங்களது விருப்பமான நபர்களின் பெயர்களையோ அல்லது தங்களின் விருப்பமானவற்றின் உருவங்களையோ சிலர் தங்கள் உடல் மீது பச்சை குத்திக் கொள்வது சமீபத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அந்த வகையில் பெங்களூரு-வை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மீது உள்ள அன்பை வெளிப்படுத்துவதற்காக அவரது பெயரை தன்னுடைய நெற்றியில் பச்சை குத்திக்(tattoo) கொண்டு இருப்பது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
இது தொடர்பான வீடியோவை பெங்களூருவை சேர்ந்த கிங் மேக்கர் டாட்டூ ஸ்டுடியோ வெளியிட்டு இருந்தது.
அதில், பெண் ஒருவர் பச்சை குத்திக் கொள்வதற்காக இருக்கையில் சாய்ந்து படுத்துள்ளார், முதலில் டாட்டூ கலைஞர் பேனா மையால் தீட்டப்பட்ட பெயர் மாதிரியை பெண்ணின் நெற்றியில் வைத்து அளவு பார்த்து அச்சு வைத்துக் கொள்கிறார்.
பின் டாட்டூ போடும் கருவியின் உதவிக் கொண்டு சம்பந்தப்பட்ட பெண்ணின் நெற்றியில் டாட்டூ வரையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
பெண்ணின் செயலுக்கு கண்டனம்
சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு இருந்த இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களை குவித்து வருகிறது.
அதே சமயம் பலர் பச்சை குத்திக் கொண்ட பெண்ணின் செயலை, அதிகப்படியான செயல் என்றும், உண்மையான காதலை நிரூபிக்க இது போன்ற வெளித் தோற்றமான செயல்கள் தேவையில்லை, உண்மையான அன்பும் அரவணைப்பும் போதும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.