ரூ.21,000 சம்பளத்தில் பெங்களூருவில் வசதியான வாழ்க்கை - இளைஞர் சொன்ன ரகசியம்
பெங்களூரு இந்தியாவின் ஐடி தலைநகராக இருப்பதால், வேலை தேடி நாள்தோறும் அங்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்தியாவில் வாழ்க்கை செலவினங்கள் அதிகமுள்ள நகரங்களில், ஒன்றாக பெங்களூரு கருதப்படுகிறது.
ரூ.21,000 சம்பளத்தில் பெங்களூரு வாழ்க்கை
லட்சங்களில் சம்பளம் வாங்கினாலும், பெங்களூருவில் வாழ்க்கை நடத்த சிரமமாக உள்ளதாக, பெங்களூருவாசிகள் சமூகவலைத்தளங்களில் கூறுவதை காண முடியும்.
இந்நிலையில், ரூ.21,000 சம்பளத்தில் பெங்களூருவில் நல்ல வாழ்க்கை வாழ்ந்துவருவதாக இளைஞர் எழுதிய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரெட்டிட் தளத்தில் பயனர் ஒருவர் எழுதிய பதிவில், 6 மாதங்களாக பெங்களூருவில் வசித்து வருவதாகவும், 21,000 சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவது எப்படி எனவும் தனது மாதாந்திர செலவுகளை பகிர்ந்துள்ளார்.
6 months of living alone in India — here's what my monthly expenses look like
byu/adarshhehe inpersonalfinanceindia
இதில், உணவுக்கு மாதம் ரூ.8,000 செலவிடுவதாகவும், ரூ,23,000 வாடகை உள்ள வீட்டில் நண்பர்களுடன் வசித்து வருவதால் வீட்டு வாடகையாக ரூ.9,000 செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பொது போக்குவரத்தில் பயணிப்பதால், போக்குவரத்து செலவிற்கு மாதம் ரூ.2000 செலவாகுவதாகவும், இதர செலவுகள் ரூ.2000 எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து, இது ஆடம்பரமான வாழ்க்கை இல்லை என்றாலும், சௌகரியமான வாழ்க்கை முறை. எனக்கு மது அருந்துவது, புகைப்பது, பார்ட்டிகளுக்கு செல்வது போன்ற பழக்கம் இல்லாததால் பெங்களூருவில் இந்த சம்பளத்தில் என்னால் வாழ முடிகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பயனர் ஒருவர், நானும் அதே வயது தான். ஆனால், இந்த பதிவை படித்த போதுதான் எவ்வளவு தேவையற்ற செலவுகளை செய்கிறேன் என உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு சிலர், இந்த வயதிலே தனிப்பட்ட வாழ்க்கையிலும், நிதி ரீதியாகவும் ஒழுக்கமாக உள்ளதாக இளைஞரை பாராட்டி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |