சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்: தனியாளாக பாகிஸ்தானை பந்தாடி சதமடித்த வீராங்கனை
மகளிர் உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு 222 ஓட்டங்களை இலக்காக அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.
தடுமாறிய அவுஸ்திரேலியா
கொழும்பில் நடந்து வரும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன.
Rameen Shamim follows through with a well-taken catch to get rid of Georgia Wareham 👌
— ICC (@ICC) October 8, 2025
Watch #AUSvPAK LIVE in your region, #CWC25 broadcast details here ➡️ https://t.co/7wsR28PFHI pic.twitter.com/uCPmsESsxB
பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தெரிவு செய்ய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது. ஆரம்பத்தில் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த அவுஸ்திரேலியா 76 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகள் என தடுமாறியது.
அதன் பின்னர் 115 ஓட்டங்களுக்கு 8வது விக்கெட்டை இழக்க, அலானா கிங் மற்றும் பெத் மூனி பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Fifth ODI 💯 for Beth Mooney and what a crucial time to bring it up 👏
— ICC (@ICC) October 8, 2025
Watch her in action at #CWC25, broadcast details here ➡️ https://t.co/ULC9AuHQ4P#AUSvPAK pic.twitter.com/EGX8owXgNw
பெத் மூனி சதம்
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி (Beth Mooney) 114 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 109 ஓட்டங்கள் விளாசினார்.
அலானா கிங் (Alana King) 49 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் விளாச, அவுஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 221 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் தரப்பில் நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகளும், ரமீன் ஷமீம் மற்றும் பாத்திமா சனா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |