வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ: கால்பந்து வீரர்களில் முதல் பில்லியனர்
கால்பந்து வீரர்களில் முதல் பில்லியனர் அந்தஸ்தை எட்டிய போர்த்துகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரலாறு படைத்துள்ளார்.
போர்த்துகல் ஜாம்பவான்
சவுதி அரேபியாவில் புதிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்ததன் வழியாக 40 வயதான போர்த்துகல் ஜாம்பவான் வரலாறு படைத்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் அணியை விட்டு வெளியேறிய ரொனால்டோ 2023 இல் சவுதி அரேபியாவில் அல்-நசர் அணியில் சேர்ந்தார்.
அத்துடன் வருடத்திற்கு 173 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சாதனை ஒப்பந்தத்தையும் முன்னெடுத்தார். இந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தின் கடைசி கட்டத்தில் இன்னொரு நிறுவனத்துடன் ரொனால்டோ ஒப்பந்தத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் கசிந்தது.
ஆனால் புதிய நிபந்தனைகளுடன், அதிக சம்பளத்துடன் அதே அல்-நசர் நிர்வாகத்துடன் பயணிக்க ரொனால்டோ முடிவு செய்துள்ளார். வெளியான தரவுகலின் அடிப்படையில், அடுத்த இரண்டு வருடங்களில் 492 மில்லியன் பவுண்டுகள் தொகையை அவர் ஈட்ட இருக்கிறார்.
முதல் பில்லியனர்
இதனால் அவரது சொத்து மதிப்பு 1.045 பில்லியன் பவுண்டுகள் என உயர்ந்துள்ளது. கால்பந்து வரலாற்றில் முதல் பில்லியனர் என்ற அந்தஸ்திற்கு ரொனால்டோ வந்துள்ளார்.
மட்டுமின்றி, Nike, Armani, Herbalife மற்றும் Tag Heuer போன்ற நிறுவனங்களுடன் பல வருடங்களுக்கான விளம்பர ஒப்பந்தத்தில் ரொனால்டோ ஈடுபட்டுள்ளார். அத்துடன், Clear Shampoo, DAZN, LiveScore மற்றும் Panini போன்ற நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |