நீட்டிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்: அமெரிக்க அரசு தீவிர ஆலோசனை!
அமெரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா BA.2 வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 18ம் திகதி முடிவடைய இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிக்க ஜோ பிட்டன் அரசாங்கம் முடிவுசெய்து இருப்பதாக அறிக்கைகள் வெளியாகி உள்ளன.
ஓமிக்ரான் கொரோனா வைரஸின் துணை திரிபு மாதிரியான BA.2 வைரஸ் அமெரிக்காவில் வேகமாக பரவி வருவதால் பல்வேறு பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை அமெரிக்காவின் மாகாண அரசாங்கங்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
கடந்த சிலநாள்களில் மட்டும் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதால், கொரோனா குறித்து அடுத்து வரவிருக்கும் அறிக்கைகளில், ஏப்ரல் 18ம் திகதியுடன் முடிவடைடைய இருக்கும் கட்டுப்பாடுகளை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பது தொடர்பான முக்கிய முடிவுகள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுரங்கப்பாதை ரயில் பயணங்கள், பேருந்து பயணங்கள், மற்றும் டாக்ஸி பயணங்கள் போன்ற பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது தொடர்பான கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி அதிகாரிகள் கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கவேண்டும் என அமெரிக்க அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பிரித்தானியாவில் தீவிபத்தில் சிக்கிய 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி திடீர் மரணம்!