போலந்திற்கு ஜனாதிபதி ஜோ பைடன் அவசர பயணம்: படைகளை அதிகரிக்கும் அமெரிக்கா
உக்ரைனின் எல்லைக்கு மிக நெருங்கிய ஐரோப்பிய நாடான போலந்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று (வெள்ளிக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது 30 நாள்களை கடந்து தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், உக்ரைனின் அண்டை ஐரோப்பிய நாடான போலந்திருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சுற்றுப்பயணம் இன்று (வெள்ளிக்கிழமை) சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யா ஜனாதிபதி விளாடிமர் புடினின் போர் நடவடிக்கையானது, மேற்கு நாடுகளில் பரவும் அபாயம் இருப்பதாக தொடர்ந்து எச்சரித்த நிலையில் இதனை மூன்றாம் உலக போர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமரிசித்து இருந்தார்.
மேலும் உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, உக்ரைனில் அமெரிக்கா தான் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை மறைத்து வைத்து இருப்பதாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்தநிலையில், உக்ரைனின் மேற்கு எல்லை பகுதி ஐரோப்பிய நாடான போலந்திருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த சுற்றுப்பயணமானது, நேட்டோ கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு அங்குலத்தையும் அமெரிக்கா பாதுகாக்கும் என்பதை உணர்த்துவதற்காக மேற்கொள்ள படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் எல்லையில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போலந்தின் ரெஸ்ஸோவ் நகருக்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் தனது தனி விமானம் மூலம் வந்து சேர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில், நேட்டோ ராணுவ படையில் இடம்பெற்றுள்ள அமெரிக்க 82வது வான்வழிப் பிரிவு படையை சந்தித்து கிழக்கு பகுதியில் படைகளை அதிகப்படுத்துவது குறித்து கலந்து ஆலோசிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கான மனிதாபினமான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யா போரானது மேலும் விரிவடையும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுவதால் நேற்று ஐரோப்பிய நாடான பிரஸ்ஸல்ஸ் (Brussels) நேற்று (வியாழக்கிழமை) நடந்த நேட்டோ அமைப்பின் அவசர கால கூட்டத்தில் ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் பல்கேரியா ஆகிய பகுதிகளில் நேட்டோ படைகளை அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சேன்ஸலர் ரிஷி சுனக்கின் மனைவிக்கு ரஷ்யாவுடன் தொடர்பு... சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விடயம்