ரஷ்யாவில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு! அவசரகால நிலையை அறிவித்த கவர்னர்:வீடியோ
உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய நகரம் ஒன்றில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
குண்டுவெடிப்பு
உக்ரைனின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ரஷ்ய நகரமான பெல்கோரோடில் உள்ள தெரு ஒன்றில் வியாழக்கிழமை பிற்பகுதியில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக ஆரம்ப அறிக்கைகளில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் தொடர்பான தகவல்கள் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#Russia: Explosion so massive a car flew up and landed on the roof of the building. Possibly a car bomb. Downtown #Belgorod. pic.twitter.com/VDTP82BDYw
— Igor Sushko (@igorsushko) April 20, 2023
பெல்கோரோட் பிராந்திய கவர்னர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ், அப்பகுதியில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
அத்துடன் நகரின் முக்கிய வீதிகளில் ஒன்றில் 20 மீட்டர் (65 அடி) குறுக்கே பள்ளம் இருப்பதாக டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த சம்பவத்திற்கான காரணம் என்னவென்று அவர் குறிப்பிடவில்லை.
வீடியோ காட்சிகள்
உக்ரைன் எல்லைக்கு மிக அருகில் ஏற்பட்டுள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் தெருவில் கான்கிரீட் குவியல்கள், பல சேதமடைந்த கார்கள் மற்றும் உடைந்த ஜன்னல்கள் கொண்ட கட்டிடம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது.
❗️ Russian Defense Ministry commented on the explosion in #Belgorod
— NEXTA (@nexta_tv) April 20, 2023
"In the evening of April 20, while performing a flight of a Su-34 aircraft of the Air Force over the city of Belgorod, there was an accidental fall of an aircraft munition," the ministry said in a statement.… pic.twitter.com/rnFmIVdP91
அவற்றின் ஒரு பகுதியில் கடையின் கூரையில் கார் தலைகீழாகத் கிடப்பதை பார்க்க முடிகிறது.
உக்ரைனில் சிறப்பு இராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடக்கத்திலிருந்து, எரிபொருள் மற்றும் வெடிமருந்து கடைகள் போன்ற இலக்குகள் வெடிப்புகளால் உலுக்கிய பல தெற்கு ரஷ்ய பிராந்தியங்களில் பெல்கோரோட் ஒன்றாகும்.