15 வாரங்கள் தப்பிய போட்டியாளரை குறி வைத்து தூக்கிய பிக்பாஸ் - நடந்தது என்ன?
'பிக் பாஸ் தமிழ் 8' நிகழ்ச்சியில் இறுதிக்கட்ட டாஸ்க்கான பணப்பெட்டி டாஸ்கில், 15 வாரங்களாக மக்களால் காப்பாற்றப்பட்ட போட்டியாளர் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
Bigg Boss Season 8
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 8 தற்போது சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு மத்தியில் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.
குறித்த சீசனில் தற்போது ஜாக்குலின், முத்து, ராயன், சௌந்தரியா, விஷால் மற்றும் பவித்ரா மட்டுமே போட்டியாளர்களாக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இறுதிக்கட்ட போட்டியான பணப்பெட்டி டாஸ்க் நடந்துக்கொண்டிருக்கிறது.
அதில் பங்கேற்ற முக்கிய போட்டியாளரான ஜாக்குலின் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.
ஜாக்குலின் எலிமினேஷன்
குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள் வரமுடியாமையால், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து ஜாக்குலின் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த சீசனில் அனைத்து வாரத்திலும் ஜாக்குலின் நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும் மக்கள் வாக்களித்து, அவரை போட்டியில் தொடர வைத்தனர்.
இந்நிலையில் ஜாக்குலின் இவ்வாறு வெளியேறியது அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது ஜாக்குலினுக்கு வைக்கப்பட்ட குறி என, பிக் பாஸ் குழுவினரை அனைத்து ரசிகர்களும் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |