பொம்மை என நினைத்து பாம்பை கடித்த 1 வயது குழந்தை - அடுத்து நடந்த அதிர்ச்சி
1 வயது குழந்தை பொம்மை என நினைத்து பாம்பை கடித்துள்ளது.
பாம்பை கடித்த குழந்தை
பீகார் மாநிலம் மேற்கு சாம்பரான் மாவட்டத்தின் பங்கட்வா கிராமத்தில் உள்ள தனது வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமை, ஒரு வயதான கோவிந்தா என்ற குழந்தை விளையாடி கொண்டிருந்தது.
குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில், குழந்தை பாட்டியின் கண்காணிப்பில் இருந்துள்ளது. அப்போது 2 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று, குழந்தையின் அருகே ஊர்ந்து வந்துள்ளது.
குழந்தை அதை கண்டுகொள்ளாமல் விளையாடிக்கொண்டிருந்த போது, அது குழந்தையின் கையை சுற்ற ஆரம்பித்துள்ளது. பொம்மை என நினைத்த குழந்தை, பாம்பை பிடித்து கடிக்க தொடங்கியுள்ளது.
உயிரிழந்த பாம்பு
பாம்பை கடிப்பதை பார்த்த குழந்தையின் பாட்டி, பதறியடித்து கொண்டு வந்து பார்த்த போது, குழந்தை கடித்ததில், பாம்பு இரண்டு துண்டுகளாகி இறந்து விட்டது. குழந்தையும் உடனே மயங்கி விட்டது.
உடனடியாக, அருகே உள்ள மஜௌலியா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை மேல் சிகிச்சைக்காக பெட்டியா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இது மிகவும் அசாதாரணமானது என கூறிய மருத்துவர், "விஷத்தின் பாதிப்பு சிறிய அளவில் உள்ளதால் குழந்தைக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை. குழந்தை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |