தேர்தலில் வைக்கப்பட்ட மை இருக்கிறதா? மோடியின் கையை இழுத்து பார்த்த பீகார் முதலமைச்சர்
விழா மேடையில் இருந்த இந்திய பிரதமர் மோடியின் கையை இழுத்த பீகார் முதலமைச்சரின் வீடியோ வைரலாகி வருகிறது.
மேடையில் மோடி
இந்திய மாநிலமான பீகார் சென்றுள்ள நரேந்திர மோடி அங்குள்ள நலந்தா பல்கலைக்கழகத்தின் புதிய விளாக கட்டிடத்தை திறந்து வைத்து விழாவில் பங்கேற்றார்.
இந்த விழாவில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், பீகார் மாநில ஆளுநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, நிகழ்ச்சியின் போது மேடையில் மோடியின் அருகே பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் அமர்ந்திருந்தார். அவர் திடீரென மோடியின் இடது கையை இழுத்து பிடித்தார்.
பின்னர், வாக்குபதிவின் போது அவரது விரலில் வைக்கப்பட்ட மை இருக்கிறதா இல்லை அழிந்துவிட்டதா என்று பார்த்தார்.
இதனை எதிர்பாராத நரேந்திர மோடி, நிதீஷ் குமாரின் செயலை பார்த்து லேசான புன்னகையை வெளிப்படுத்தி அமைதியானார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |