10ஆம் வகுப்பு தேர்வில் தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீகார் மாணவி
சென்னையில் உள்ள கவுல் பஜார் அரசு மேல்நிலை பள்ளியில் பீகாரை சேர்ந்த மாணவி ஜியா குமாரி 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் தற்போது நடந்துமுடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு 467 மற்றும் தமிழில் 93 மதிப்பெண்கள் எடுத்தும் அசத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மாணவி ஜியா குமாரி செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழ்நாட்டின் கல்வி மற்றும் அரசின் திட்டங்கள் சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார்.
மேலும், பள்ளியில் எனது ஆசிரியர்களும் நன்றாக பாடம் கற்றுத்தருவார்கள், தினமும் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்று கூறினார்.
வீட்டில் அனைவரும் இந்தி தான் பேசுவோம், அப்பாவிற்கும் தமிழ் தெரியாது, அம்மாவிற்கு தமிழ் தெரியும், எங்களுடைய சொந்த ஊர் பீகார்.
என்னுடைய ஆசிரியர்கள் தமிழில் நல்ல மதிப்பெண் எடுக்க உதவினார்கள். அதனால் தான் இவ்வளவு மதிப்பெண் எடுக்க முடிந்தது.
17 வருடத்திற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்தோம். ஆரம்பத்தில் தமிழ் படிக்க கடினமாக இருந்தது. போக போக தமிழ் பழகி விட்டது.
மேலும், பள்ளியில் வழங்கிய புத்தகம், ஷூ, நான் முதல்வன் திட்டம், சிஜி வகுப்பு உதவியாக இருந்தது.
தமிழ்நாட்டில் இருந்துதான், graduate, doctor ஆன பிறகு ஊருக்கு போகவேண்டும் என்றும் என் அப்பா சொல்லி இருக்கிறார்.
பீகாரில் கல்வி குறைவாக இருந்ததால் இங்கே வந்து விட்டோம் என்று அம்மாணவி கூறினார்.
தமிழ்நாடு - எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை!#வாழ்க_தமிழ்♥️ https://t.co/kVVP0mQCyW
— M.K.Stalin (@mkstalin) May 17, 2025
மாணவி ஜியா குமாரியின் பேட்டி வெளியான நிலையில் இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாடு - எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை! என்று தனது X தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |