ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு
ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை பீகாரை சேர்ந்த இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ரயிலில் பிச்சை எடுத்த பெண்
கோலு யாதவ் என்ற பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அண்மையில் ரயில் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது சிலர் அந்த இளம்பெண்ணை கேலி செய்ததோடு, தவறான நோக்கத்தில் பார்த்தும், சங்கடமான முறையில் பேசியும் உள்ளனர்.

அதை கவனித்த கோலு யாதவ், உடனடியாக அந்த பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் பக்சரில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
இளம்பெண்ணை ஏற்றுக் கொண்ட குடும்பத்தினர்
வீட்டில் வைத்து ரயில் நடந்ததையும், இளம் பெண்ணின் முழு கதையையும் பெற்றோருக்கு கோலு யாதவ் எடுத்துக் கூறியுள்ளார்.
மகனின் மனிதநேயத்தை கண்டு மகிழ்ந்த பெற்றோர், அந்த பெண்ணை வீட்டிலேயே தங்க வைக்க சம்மதித்துள்ளனர்.

சில நாட்களுக்கு பிறகு அந்த இளம் பெண்ணின் நிலைமையை முற்றிலுமாக புரிந்து கொண்ட கோலு யாதவ், பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தற்போது இந்த தம்பதிகள் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதுடன் கோலு யாதவையும் அவரது பெற்றோர்களை பாராட்டி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |