பில் கேட்ஸ் கொரோனா தொற்றால் பாதிப்பு: சுய-தனிமைப்படுத்தலில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்
பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ்க்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், இரண்டு ஆண்டுகளை கடந்தும் உலக நாடுகளை பொருளாதார ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த மில்லியன் கணக்கான டொலர்களை வாரி வழங்கிய உலகின் முன்னணி பணக்காரரான பில் கேட்ஸ்க்கு(Bill Gates) கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனை அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான ட்விட்டரில் பில் கேட்ஸ் உறுதிபடுத்தியுள்ளார்.
அதில், ”தனக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாய் உணர்ந்ததை தொடர்ந்து எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கோவிட் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது” என தெரிவித்துள்ளார்”.
I've tested positive for COVID. I'm experiencing mild symptoms and am following the experts' advice by isolating until I'm healthy again.
— Bill Gates (@BillGates) May 10, 2022
மேலும் மருத்துவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின் படி சிகிச்சை மற்றும் சுய-தனிமைப்படுத்தல் செய்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்வென்றால், பில் கேட்ஸ் இரண்டு தவணை தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசியும் எடுத்து கொண்டுள்ளார் என்பதாகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் கொரோனா பரவல் தொடங்கிய ஆரம்பத்தில் இருந்தே அதற்கான சிகிச்சை முறை மற்றும் தடுப்பூசி தயாரிப்புகளுக்காக மில்லியன் கணக்கான உதவித் தொகையை வாரி வழங்கி வருகிறார்.
கூடுதல் செய்திகளுக்கு: முக்கிய அறிவிப்புகள் இல்லாததால்....ராணியை கிண்டல் செய்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்
மேலும் ”அடுத்த தொற்றுநோயைத் தடுப்பது எப்படி”(How to Prevent the Next Pandemic) என்ற புதிய புத்தகம் ஒன்றையும் பில் கேட்ஸ் வெளியிட்டுள்ளார்.