உலகளாவிய பெருந்தொற்று குறித்து பில் கேட்ஸ் உடன் 2015ல் விவாதித்த எப்ஸ்டீன்

Bill Gates Epstein Files
By Arbin Feb 16, 2026 05:46 AM GMT
Report

சமீபத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள எப்ஸ்டீன் ஆவணங்களில், பில் கேட்ஸ் மற்றும் நோர்வே முக்கிஸ்தர் ஒருவருடன் இணைந்து உலகளாவிய பெருந்தொற்று குறித்து எப்ஸ்டீன் விவாதித்துள்ளதாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

2015 ஜூன் மாதம்

உலகளாவிய பெருந்தொற்று ஏற்பட்டால் அதற்கு தயாராவது எப்படி என்பது தொடர்பில் ஜெனீவாவில் ஒரு சர்வதேச மாநாடு நடத்தவும் இவர்கள் மூவரும் திட்டமிட்டுள்ளதாகவே, அந்த மின்னஞ்சல்களில் இருந்து தெரிய வருகிறது.

உலகளாவிய பெருந்தொற்று குறித்து பில் கேட்ஸ் உடன் 2015ல் விவாதித்த எப்ஸ்டீன் | Bill Gates Epstein Global Pandemic

சர்வதேச சமூகம் எதிர்கொண்ட முந்தைய சவால்களான எபோலா மற்றும் போலியோவை அடிப்படையாகக் கொண்ட ஒரு தயாரிப்பாக இது இருக்க வேண்டும் எனவும் அந்த மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்ஸ்டீன் மற்றும் பில் கேட்ஸுடன் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டவர் நோர்வேயை சேர்ந்த சர்வதேச அமைதி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான Terje Rod-Larsen என்பவரே.

இவர்களுடன், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் மார்கரெட் சான், ஐ.சி.ஆர்.சி தலைவர் பீட்டர் மௌரர், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் பொறுப்புத் தலைவர் மைக்கேல் மோலர் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரூட் ஆகியோரும் கலந்துகொண்டுள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆண்ட்ரூவிடம் நெருக்கம்... எப்ஸ்டீன் ஆவணங்களில் 7461 முறை குறிப்பிடப்பட்ட ஜேர்மன் தொழிலதிபர்

ஆண்ட்ரூவிடம் நெருக்கம்... எப்ஸ்டீன் ஆவணங்களில் 7461 முறை குறிப்பிடப்பட்ட ஜேர்மன் தொழிலதிபர்

இந்த மின்னஞ்சலானது 2015 ஜூன் மாதம் 2 ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளது. இன்னொரு கவனிக்கத்தக்க விடயமாக இங்கிலாந்தின் சர்ரேயை தளமாகக் கொண்ட உயிரியல் ஆராய்ச்சி அமைப்பான பிர்பிரைட் நிறுவனம், நவம்பர் 2018 இல் காப்புரிமை ஒன்றை வாங்கியுள்ளது.

அது IBV மற்றும் பிற விலங்குகள் உள்ளிட்ட பறவைகளில் சுவாச நோய்களைத் தடுக்க தடுப்பூசியாகப் பயன்படுத்தக்கூடிய பலவீனமான கொரோனா வைரஸின் வளர்ச்சியை உள்ளடக்கியது.

உலகளாவிய பெருந்தொற்று குறித்து பில் கேட்ஸ் உடன் 2015ல் விவாதித்த எப்ஸ்டீன் | Bill Gates Epstein Global Pandemic

கேட்ஸ் அறக்கட்டளை

இதில், இந்த Pirbright நிறுவனத்திற்கு நிதியளிப்பவர்கள் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை என்றும் கூறப்படுகிறது. உலகளாவிய காய்ச்சல் தடுப்பூசியை உருவாக்குவதற்காக, 2013 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், பிர்பிரைட் நிறுவனத்திற்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இரண்டு மானியங்களை வழங்கியுள்ளது.

மனிதர்களுக்குப் பரவக்கூடிய பண்ணை விலங்குகள் மற்றும் வைரஸ்களின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசி அது. ஆனால் கால்நடைகளுக்கான பிர்பிரைட்டின் தடுப்பூசிக்கு நிதியுதவி செய்வதை கேட்ஸ் அறக்கட்டளை மறுத்துள்ளது.

2019 அக்டோபர் மாதம் கோவிட் பெருந்தொற்று தொடர்பில் உத்தியோகமாக அறிவிக்கப்படும் சில மாதங்களுக்கு முன்னர் உலக பொருளாதார மன்றம் மற்றும் கேட்ஸ் அறக்கட்டளையுடன், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மையம் இணைந்து, வௌவால்களிடமிருந்து பன்றிகளுக்கும், மக்களுக்கும் பரவும் பெருந்தொற்று தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர்.

உலகளாவிய பெருந்தொற்று குறித்து பில் கேட்ஸ் உடன் 2015ல் விவாதித்த எப்ஸ்டீன் | Bill Gates Epstein Global Pandemic

மேலும், 2019 செப்டம்பர் மாதம் biotech நிறுவனத்தில் 55 மில்லியன் டொலர் தொகையை கேட்ஸ் அறக்கட்டளை முதலீடு செய்தது, இதனால் அந்த நிறுவனத்திற்கான மொத்த முதலீடு 100 மில்லியன் டொலராக அதிகரித்தது.

இதில் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசி தயாரிக்க BioNTech மற்றும் Pfizer நிறுவனங்களுக்கே முதலில் அனுமதி வழங்கப்பட்டது.

எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான மின்னஞ்சல்களில் கோவிட் தொடர்பில் சதி திட்டம் தீட்டியதாக தரவுகள் இல்லை. ஆனால், 2019ல் அறிவிக்கப்படும் பெருந்தொற்றுக்கு என 2015ல் இருந்தே பில் கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீன் தரப்பு தயாரானதை அம்பலப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US