55 வயதில் இளம்பெண்ணுடன் தவறான உறவில் ஈடுபட்ட பில் கேட்ஸ்: அதனால் தொடரும் பிரச்சினைகள்
கோடீஸ்வரரான பில் கேட்ஸ், இளம்பெண் ஒருவருடன் வைத்திருந்த தவறான உறவு, அவரது திருமண வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்தது உலகறிந்த செய்தி.
இந்நிலையில், பாலியல் குற்றவாளியான பிரபல அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெஃப்ரீ எப்ஸ்டீன், பில் கேட்ஸை மிரட்டியதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
ஏராளம் இளம்பெண்களை சீரழித்த கோடீஸ்வரர்
வேலை தருவதாக வாக்களித்து, பருவம் எய்தாத சிறுமிகள் முதல், இளம்பெண்கள் வரை, ஏராளமானோரை சீரழித்த எப்ஸ்டீன், அந்தப் பெண்களை தனது நண்பர்கள் பலருக்கும் விருந்தாக்கிய விடயத்தையும் இன்று உலகறியும்.
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, எப்ஸ்டீனுடனான நட்பு காரணமாக, பருவம் எய்தாத ஒரு பெண்ணுடன் பாலுறவு கொண்ட விடயம் ராஜ குடும்பத்திலும், பிரித்தானியாவிலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதன் காரணமாக இப்போதும் பிரச்சினைகளை சந்தித்துவருகிறார் ஆண்ட்ரூ.
Meet Mila Antonova, the young bridge player who Bill Gates had an affair with in 2010. Jeffrey Epstein found out about this affair and used it as leverage against Bill Gates. Bill Gates began having private meetings with Epstein in 2011, but Epstein didn’t find out about the… pic.twitter.com/4W6gTKx7WN
— Erin Elizabeth Health Nut News ? (@unhealthytruth) May 21, 2023
ஆனால், அப்படி தன் நண்பர்கள் என அழைக்கப்படும் நபர்கள் தன் வீட்டுக்கு வரும்போதும், அவர்களை இரகசிய கமெராக்கள் மூலம் வீடியோ எடுத்து, அந்த வீடியோக்களை பத்திரமாக வைத்துள்ளாராம் எப்ஸ்டீன்.
சிக்கிய பில் கேட்ஸ்
இந்நிலையில், உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், 2010ஆம் ஆண்டு, bridge game என்னும் ஒருவகை சீட்டு விளையாடும் பெண்ணான மிலா (Mila Antonova) என்னும் பெண்ணை சந்தித்துள்ளார்.
அப்போது, திருமணமாகி தன் மனைவியுடன் வாழ்ந்துவந்த பில் கேட்ஸுக்கு வயது 55. மிலா தன் 20 வயதுகளில் இருந்துள்ளார். இருவருக்கும் அந்த விளையாட்டில் இருந்த ஆர்வம், பிறகு இருவருக்குள்ளும் தவறான உறவு உருவாவது வரை கொண்டு சென்றுள்ளது.
2013இல் கோடீஸ்வரரான ஜெஃப் எப்ஸ்டீனை சந்தித்துள்ளார் மிலா. மிலா படிக்க நிதி உதவி செய்துள்ளார் ஜெஃப் எப்ஸ்டீன்.
Bill Gates story about Jeffrey Epstein just having a professional business relationship is falling apart today. pic.twitter.com/hm1KlChuXy
— Big Fish (@BigFish3000) May 21, 2023
பின்னர், பில் கேட்ஸிடம் தனது தொண்டு நிறுவனம் ஒன்றிற்காக பணம் கேட்டுள்ளார் ஜெஃப் எப்ஸ்டீன். ஆனால், பில் கேட்ஸ் ஜெஃப் எப்ஸ்டீனுக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார்.
இதற்கிடையில், பில் கேட்ஸுக்கும் மிலாவுக்கும் இடையில் இருந்த உறவு குறித்து எப்ஸ்டீனுக்கு தெரியவந்துள்ளது. 2017ஆம் ஆண்டு, பில் கேட்ஸுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிய எப்ஸ்டீன், தான் மிலாவை படிக்கவைக்க செலவு செய்த பணத்தைத் திருப்பித் தருமாறு பில் கேட்ஸிடம் கேட்டுள்ளார்.
அதாவது, மறைமுகமாக, தனக்கு பணம் தராவிட்டால், மிலாவுக்கும் பில் கேட்ஸுக்குமான உறவை வெளியே கொண்டுவந்துவிடுவதாக பிளாக் மெயில் செய்துள்ளார் எப்ஸ்டீன்.
ஆனால், தனக்கும் எப்ஸ்டீனுக்குமான உறவு வெறும் தொண்டு நிறுவனங்கள் அடிப்படையிலானது மட்டுமே என்று கூறி, அவருக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டது பில் கேட்ஸ் தரப்பு.
அத்துடன், பின்னர் பில் கேட்ஸுக்கும் மிலாவுக்கும் இடையிலான உறவும் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், தன் எப்ஸ்டீனை சந்தித்த காலகட்டத்தில், அவர் உதவி செய்யும் ஆர்வமுடைய ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் என்பது மட்டுமே தனக்குத் தெரியும் என்று கூறியுள்ள மிலா, அவரது குற்றப்பின்னணியோ, அவரது மோசமான நோக்கங்களோ அப்போது தனக்குத் தெரியாது என்றும், அவரது செயல்கள் அருவருக்கத்தக்கவையாக உள்ளன என்றும் கூறியுள்ளார்.