விவாகரத்துக்குப் பிறகு உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸூக்கு நேர்ந்த நிலை
அமெரிக்க கோடீஸ்வரர் பில் கேட்ஸ், விவாகரத்துக்குப் பிறகு உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ரியல் டைம் பணக்காரர்கள் பட்டியலில், பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவிடம் இருந்து விவாகரத்தை பெற்ற பிறகு, உலக பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து சரிந்துள்ளார்.
அவரது முன்னாள் மனைவி மெலிண்டாவுக்கு புதிதாகப் பங்குகளை பரிமாற்றம் செய்ததை தொடர்ந்து, பில் கேட்ஸ்-ன் மொத்த சொத்த மதிப்பு இப்போது 129.6 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கிட்டத்தட்ட 2.4 பில்லியன் டொலர் மதிப்புள்ள பங்குகள் மெலிண்டாவுக்கு மாற்றப்பட்டது என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் 5வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார், அவரின் மொத்த சொத்து மதிப்பு 130.3 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.