மிக மோசமான ஏழ்மை நிலையில் பில்லியன் மக்கள்... வெளியான அறிக்கை
உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான வறுமை நிலையில் வாழ்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
மோசமான ஏழ்மை நிலையில்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் சரிபாதிக்கும் மேலானவர்கள் சிறார்கள் என்றே தெரிய வந்துள்ளது. மேலும், போர் நடக்கும் நாடுகளில் வறுமை விகிதம் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 2023ல் உலகம் முழுவதும் அதிக மோதல்கள் உருவாகியுள்ளது. UNDP மற்றும் OPHI ஆகிய இரு அமைப்புகளும் கடந்த 2010ல் இருந்தே ஏழ்மை குறித்த தரவுகளை வெளியிட்டு வருகிறது.
மொத்தம் 112 நாடுகளில் ஏழ்மை நிலையில் உள்ள 6.3 பில்லியன் மக்களிடம் இருந்து தரவுகளை திரட்டியுள்ளனர். 2024ல் உலகம் முழுவதும் மிக மோசமான ஏழ்மை நிலையில் 1.1 பில்லியன் மக்கள் அவதிப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதில் கடுமையான போர் நெருக்கடியில் 455 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். போர் நெருக்கடி மிகுந்த நாடுகளில் உள்ள ஏழைகள், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவே போராடுவதாக கண்டறிந்துள்ளனர்.
5 நாடுகளில் வசிக்கின்றனர்
கடந்த ஆண்டு 110 நாடுகளில் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மொத்தம் 6.1 பில்லியன் மக்கள் ஏழ்மை நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டனர்.
வியாழக்கிழமை வெளியான அறிக்கையில், 18 வயதிற்குட்பட்ட 584 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையை அனுபவித்து வருகின்றனர். இது உலகம் மொத்தமுள்ள சிறார்களில் 27.9 சதவிகிதம் என்றே கூறப்படுகிறது.
மேலும், உலகின் மிக ஏழ்மையான மக்களில் 83.2 சதவீதம் பேர் துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் வாழ்கின்றனர் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.
1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 234 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் வாழ்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீவிர வறுமையில் வாழ்வதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 1.1 பில்லியன் மக்களில் சரிபாதி பேர்கள் இந்தியா, பாகிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு ஆகிய 5 நாடுகளில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |