கோடீஸ்வரராக மாற பின்பற்றவேண்டிய 6 எளிய வழிமுறைகள்., பில்லியனர் வழங்கிய ஆலோசனை
பில்லியனர் ஹர்ஷ் கோயங்கா தனிப்பட்ட செல்வத்தை அதிகரிக்க சில பயனுள்ள ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார்.
தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தன்டுஹ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், செல்வத்தை உயர்த்தும் ஆறு எளிய வழிகளை கூறியுள்ளார்.
செல்வத்தை வளர்க்கும் ஆலோசனைகள்
- வருமானத்தை விட குறைவாக செலவு செய்யுங்கள்.
- செலவு செய்யும் பொருள்கள் வருமானத்தை உருவாக்குவதாக இருக்கவேண்டும்.
- வருமானத்தை மட்டுமல்ல, செல்வத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்.
- நிதி குறித்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
- மதிப்பு உருவாக்கும் வாய்ப்புகளை தேடுங்கள்.
- சம்பளத்திற்காக மட்டுமல்ல, கற்றுக்கொள்வதற்காக வேலை செய்யுங்கள்.
கோயங்காவின் ஆலோசனைகளை பலரும் வரவேற்றுள்ளனர். ஆனால் சிலர், "இந்த ஆலோசனைகள் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே பயன்படும்" என எதிர்ப்புத் தெரிவித்தனர்.
யார் இந்த ஹர்ஷ் கோயங்கா?
RPG நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, இந்தியாவின் மிகப்பெரிய வணிக வம்சாவளியில் ஒன்றின் தலைமுறையைச் சேர்ந்தவர்.
24 வயதில் CEAT நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்ட அவர், 1990-ஆம் ஆண்டில் தந்தை டாக்டர் R.P. கோயங்காவைத் தொடர்ந்து RPG குழுமத்தின் தலைவராக உயர்ந்தார்.
தற்போது, KEC International, CEAT, RPG Life Sciences, Raychem RPG உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பொருளாதார வாரியத் தலைவராக உள்ளார்.
மேலும், IMD (லசான், சுவிட்சர்லாந்து), இந்திய வர்த்தகர் மையம் (IMC), மற்றும் FICCI போன்ற பல வணிக அமைப்புகளில் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.
ஹர்ஷ் கோயங்காவின் மொத்த சொத்துமதிப்பு சுமார் $3.3 பில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |