அம்பானி, அதானியைத் தொடர்ந்து இந்தியாவின் 3-வது பெரும் பணக்காரராக உருவெடுத்த இளம்பெண்!
ரோஷ்னி நாடார், தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார பெண்ணாக உருவெடுத்துள்ளார்.
முகேஷ் அம்பானி, கௌதம் அதானியைத் தொடர்ந்து இந்தியாவின் மூன்றாவது பெரும் பணக்காரராகவும், இந்தியாவின் மிகப்பெரிய பெண் பணக்காரராகவும், HCL Technologies நிறுவனர் சிவ் நாடாரின் மகளான ரோஷ்னி நாடார் உருவெடுத்துள்ளார்.
HCLTech நிறுவனத்தின் புரமோட்டர் நிறுவனங்களில் சிவ் நடார் வைத்திருந்த 47 சட்டபவீத பங்குகளை அவரது மகளுக்கு பரிசாக வழங்கினார்.
இதன் மூலம், ரோஷ்னி நாடார், 57.33% பங்குகளை கொண்ட பெரும்பங்கு உரிமையாளராக ஆனார்.
இந்தியாவின் மூன்றாவது பணக்காரர்
Bloomberg Billionaires India பட்டியலின்படி, ரோஷ்னி இந்தியாவின் மூன்றாவது பணக்காரராக மாறியுள்ளார். இதற்கு முன்பு, இந்த இடத்தில் அவரது தந்தை சிவ் நாடார் இருந்தார்.
ரோஷ்னி நாடார், நீதா அம்பானி, இஷா அம்பானி, அசிம் பிரேம்ஜி, நாராயண மூர்த்தி போன்ற தொழிலதிபர்களைவிட அதிக செல்வத்துடன் உள்ளார்.
இந்தியாவின் பணக்காரர் பட்டியலில்:
முகேஷ் அம்பானி - $88.1 பில்லியன் சொத்து மதிப்புடன் முதலிடம்.
கௌதம் அதானி - $68.9 பில்லியன் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடம்.
ரோஷ்னி நாடார் - $35.9 பில்லியன் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடம்.
Bloomberg Billionaires பட்டியலின்படி, ரோஷ்னி நாடார் ஆசியாவின் பணக்கார பெண்ணாகவும் மற்றும் உலகின் 5-வது பணக்கார பெண்ணாகவும் இருக்கிறார்.
சிவ் நடார் வழங்கிய பங்கு பரிசு
HCL Tech சமீபத்தில் ஒரு சட்டப்பூர்வ தகவல் (Regulatory Filing) வெளியிட்டது. அதில், சிவ் நடார் மார்ச் 6, 2025 அன்று தனது 47% பங்குகளை மகளுக்கு பரிசாக வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது Vama Sundari Investments (Delhi) மற்றும் HCL Corporation ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளது.
HCLTech வெளியிட்ட அறிவிப்பில்:
முந்தைய நிலையில் சிவ் நாடார் 51% பங்குகளையும், ரோஷ்னி நாடார் 10.33% பங்குகளையும் வைத்திருந்தார்.
பங்கு பரிமாற்றத்திற்குப் பிறகு, ரோஷ்னி நடார் 57.33% பங்குகளை பெற்றுக் கொண்டார்.
இதன்மூலம், சிவ் நடாரின் பங்கு அளவு 4 சதவீதமாக குறைந்தது.
HCLTech-யில் பெரும்பங்கு உரிமையாளராக ரோஷ்னி நடார்
HCLTech நிறுவனத்தில், Vama Sundari Investments மற்றும் HCL Corporation நிறுவனங்கள் சேர்த்து 44.34% பங்குகளை வைத்துள்ளன.
இந்நிலையில், ரோஷ்னி நடார் தற்போது இந்த நிறுவனங்களில் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளார்.
HCLTech அறிவிப்பில், "இந்த பரிமாற்றத்தின் மூலம், ரோஷ்னி நடார் Vama Delhi மற்றும் HCL Corporation நிறுவனங்களின் பெரும்பங்கு உரிமையாளராக மாறுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசு மூலம், ரோஷ்னி நாடார் மட்டும் அல்ல, இந்திய தொழில்துறை வரலாற்றிலும் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |