புகைப்படம் எடுக்க குவிந்த மக்கள்... திரும்பி வந்த பின்லேடனின் பாதுகாப்பு தலைவர்: முகம் மாறும் காபூல்
அமெரிக்கா மற்றும் நேட்டோ துருப்புகள் வெளியேறிய பின்னர் உலகின் மிகப்பெரிய தீவிரவாதிகள் பலர் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க சிறப்பு படைகளால் படுகொலை செய்யப்பட்ட ஒசாமா பின்லேடனின் முதன்மை பாதுகாப்பு தலைவராக செயல்பட்ட அமீனுல் ஹக்கும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வந்த காணொளி காட்சிகள் தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
2020ல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புடன் தாலிபான்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் மண்ணில் இனி மேல் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே.
மேலும், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக வாய்ப்புள்ள தீவிரவாதிகளையோ, தொடர்புடைய நபர்களையோ, குழுக்களையோ நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என தாலிபான்களும் அமெரிக்க நிர்வாகத்திற்கு உறுதி அளித்திருந்தனர்.
ஆனால், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறும் சில மணி நேரங்களுக்கு முன்னர் அமீனுல் ஹக் காபூல் நகரில் மீண்டும் தென்பட்டுள்ளார். அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முன்னணி ஆயுத விநியோகஸ்தராக செயல்பட்டு வந்த அமீனுல் ஹக் தாம் பிறந்த ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹர் பிராந்தியத்திற்கு திரும்பியதாக கூறும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Former Osama bin Laden security aide & AQ arms supplier/facilitator Amin-ul-Haq returns to his hometown after 2 decades on the run, 2 weeks after the Taliban takeover.
— Hassan I. Hassan (@hxhassan) August 30, 2021
Don’t be surprised if al-Qaeda appoints an Afghan as its next leader after Zawahiri.pic.twitter.com/cYUcwBVIl6
ஆனால் குறித்த காணொளியின் உண்மைத் தன்மை தொடர்பில் அமெரிக்கா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. தாலிபான்களின் சோதனைச்சாவடிகள் வழியாக காரில் பயணப்படும் அமீனுல் ஹக், மற்றும் ஆயுதமேந்திய பாதுகாப்பு வீரர்கள் உட்பட அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
மட்டுமின்றி, அமீனுல் ஹக்கை மீண்டும் நேரில் காண நேர்ந்த மக்கள் திரளாக குவிந்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முண்டியடிப்பதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள் வெளியேறி சில மணி நேரங்களில் ஆப்கானிஸ்தானின் முகம் படிப்படியாக மாறி வருவதாகவே சர்வதேச அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.