ஸ்கொட்லாந்து மக்களை நெருக்கும் முகத்தை சுழிக்க வைக்கும் விவகாரம்
16 வெவ்வேறு கவுன்சில் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் திங்கள் வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
ஐந்து சதவீத ஊதிய உயர்வை நிராகரித்து, விலைவாசி உயர்வு நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களை அவமதிக்கும் செயல்
ஸ்கொட்லாந்த் தலைநகரின் தெருக்களில் குவியும் குப்பைகளால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதுடன், தற்போது நோய்த்தொற்றின் பீதியில் வாழ்வதாக கூறியுள்ளனர்.
ஸ்கொட்லாந்தின் எடின்பர்க் நகரில் 16 வெவ்வேறு கவுன்சில் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் திங்கள் வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தெருக்களில் குவியும் குப்பைகளால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதுடன், Fringe விழாவின் நடுவே தலைநகரம் சர்வதேச சங்கடத்திற்கும் காரணமாக மாறியுள்ளது.
@swns
ஐந்து சதவீத ஊதிய உயர்வை தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளதுடன், விலைவாசி உயர்வு நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களை அவமதிக்கும் செயல் என்று கூறி, வேலைநிறுத்தத்தை அதன் இரண்டாவது வாரத்திற்கு நீட்டித்துள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் தங்களின் அன்றாட குப்பைகளை அகற்ற முடியாமல் குடியிருப்பிலேயே சேமிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், வெளியே ஷாப்பிங் செல்வதும், நடைபாதைகள் முழுவதும் குப்பைகளைப் பார்ப்பதும் மிகவும் அருவருப்பாக இருக்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
@swns
6 நாட்களாக குப்பைகளை வெளியே கொட்டாமல் குடியிருப்பில் சேமித்துள்ளதாக கூறும் பெண்மணி ஒருவர், இதனால் சுகாதாரம் பாதிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகஸ்டு 18ம் திகதி தொடங்கிய இந்த வேலைநிறுத்தமானது 30ம் திகதி வரையில் நீடிக்கும் என்றே கூறுகின்றனர்.
@swns