டாடா சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி! யார் இந்த ரத்தன் டாடா?
டாடா குழுமத்தின் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய ரத்தன் டாடாவின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
யார் இந்த ரத்தன் டாடா?
1937ஆம் ஆண்டு மும்பையில் நவல் டாடா, சூனி டாடாவுக்கு மகனாக பிறந்தவர்தான் ரத்தன் டாடா. இந்தியாவின் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த இவர், நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் படித்தார்.
பின்னர் 1962ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு திரும்பினார். டாடா மோட்டார்ஸ் லிமிடெட் மற்றும் டாடா ஸ்டீல் லிமிடெட் உட்பட பல டாடா நிறுவனங்களில் ரத்தன் டாடா பணியாற்றினார்.
1971ஆம் ஆண்டில் டாடா குழுமத்தின் நிறுவனங்களில் ஒன்றான ரேடியோ எலெக்ட்ரானிக்சில் ரத்தன் டாடா பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1991யில் டாடா நிறுவனங்களின் சேர்மன் ஆக பொறுப்பேற்ற அவர், டாடா குழுமத்தின் தொழிலை உலகமயமாக்குவதில் கவனம் செலுத்தினார்.
பாரிய ஒப்பந்தம்
2000ஆம் ஆண்டில் டெட்லி டீ நிறுவனத்தை வாங்கிய டாடா குழுமம், 2004யில் தென் கொரியாவின் தாவூ மோட்டார்ஸ் என்ற டிரக் தயாரிக்கும் நிறுவனத்தையும் வாங்கியது.
அதேபோல் ரத்தன் டாடா உத்திகள் மூலம் ஆங்லோ-டச்சு ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமும் (2007) வாங்கப்பட்டது. 2.3 பில்லியன் டொலர் மதிப்பிலான பாரிய ஒப்பந்தம் ஒன்றை ரத்தன் டாடா 2008யில் மேற்கொண்டார்.
அதுதான் Ford நிறுவனத்திடம் இருந்தும் ஜாகுவார், லேண்ட் ரோவர் பிராண்டுகள் கைப்பற்றப்பட்டது.
நடுத்தர வர்க்க மக்களுக்காக
ரத்தன் டாடா வணிக ரீதியில் சிந்தித்தாலும், நடுத்தர வர்க்க மக்களும் கார் வாகனத்தை எளிதில் பெற வேண்டும் என்பதற்காக புதிய கார் தயாரிப்பை மேற்கொண்டார். அதுதான் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள Nano கார். இதன்மூலம் எட்டாக்கனியாக இருந்த நடுத்தர மக்களின் கார் கனவு நிறைவேறியது.
மென்பொருள் சேவைகள் பிரிவிலும் ரத்தன் டாடா முத்திரை பதித்தார். அவரது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) உலகளாவிய தகவல் தொழில்நுட்ப தலைவராக விரிவுபடுத்தியது.
2012ஆம் ஆண்டில் டாடா குழுமத்தின் சேர்மன் பதவியில் இருந்து ரத்தன் டாடா விலகினாலும், டாடா சான்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட பிற குழு நிறுவனங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேலும், 2016ஆம் ஆண்டில் தலைமைத்துவ சர்ச்சையின்போது இடைக்கால தலைவராக திரும்பினார். தனது சாதனைகளுக்காக இந்திய அரசின் பத்மபூஷண் விருதை ரத்தன் டாடா பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |