அதி தீவிரமாக பரவும் பறவைக்காய்ச்சல்: தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவின் ஆலப்புழையில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக எல்லையோரங்களில் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆலப்புழை பகுதியில் ஹெச் 5 என் 1 என்ற பறவை காய்ச்சல் அதி தீவிரமாக பரவி வருகிறது.
இது வாத்துகளுக்கும் பரவியுள்ள நிலையில், கடந்த சில நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான கோழிகள், வாத்துகள் இறந்துவிட்டது.
இதனை தொடர்ந்து தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதார துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவலாம், பறவை எச்சங்களில் இருந்தும் தொற்று பரவும் வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளது.
மேலும் காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல் போன்றவை அறிகுறிகள் என்பதால் மனிதர்களுக்கு தொந்தரவு இருந்தால் உடனடியாக பொதுசுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.