மனித குலத்தின் 50 சதவீதம்... பறவைக் காய்ச்சல் பெருந்தொற்று தொடர்பில் எச்சரிக்கும் நிபுணர்கள்
பிரித்தானியாவில் தற்போது பரவிவரும் பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு மேலும் தீங்கு விளைவிக்கும் ஆபத்து அதிகம் என மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நிபுணர்களிடையே கவலை
பறவைக் காய்ச்சல் முதன்முறையாக விலங்குகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே நிபுணர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
@getty
பிரித்தானியாவிலும் உலகெங்கிலும் பறவைக் காய்ச்சல் அல்லது H5N1 தொற்றின் அதிகரிப்பு நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளுக்கு அதன் பாதிப்பு உறுதி செய்துள்ள நிலையில், மனிதர்களுக்கு பரவும் ஆபத்து மிக அருகாமையில் இருப்பதாக நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
இதுவரை நரிகள், நீர்நாய்கள் மற்றும் மிங்க் ஆகியவற்றில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஸ்கொட்லாந்தில் 4 நீர்நாய்களுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விலங்குகளுக்கும் தற்போது பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதால், இதன் உருமாற்றம் மனித குலத்திற்கு ஆபத்தாக முடியும் எனவும் 50% மனிதகுலம் மொத்தமாக அழியும் ஆபத்து இருப்பதாகவும் விலங்கு ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மனிதர்களுக்கும் வியாபிக்கும் ஆபத்து
பாலூட்டும் விலங்குகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்துள்ளதால், அது எஞ்சிய மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் வியாபிக்கும் ஆபத்து அதிகம் என கூறுகின்றனர்.
@PA
பிரித்தானியாவை பொறுத்தமட்டில், அதிக பறவைக்காய்ச்சல் கண்காணிப்பு மண்டலமாக பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவின் கிழக்கு பகுதியில் பறவைக்காய்ச்சல் தாக்கம் அதிகம் என்றே கண்டறியப்பட்டுள்ளது.
1997ல் பறவைக் காய்ச்சல் அடையாளம் காணப்பட்ட பின்னர் 900 பேர்களுக்கு பாதிக்கப்பட்டதில் 50% பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
2021 அக்டோபருக்கு பின்னர் பிரித்தானியாவில் ஒரே ஒருவருக்கு மட்டுமே பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.