புறாக்கள் மீது போர் தொடுக்கும் வடகொரியாவின் கிம் ஜோங் உன்: காரணம் இதுதானாம்
புறாக்கள் தான் அண்டை நாடான சீனாவில் இருந்து கொரோனா தொற்றை வட கொரியாவுக்குள் பரப்புவதாக கிம் ஜோங் உன் நம்புவதாக கூறப்படுகிறது.
இதனால் எல்லையோர மாகாணங்களுக்கு கிம் நிர்வாகம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. Hyesan மற்றும் Sinuiju மாகாணங்களில் உள்ள அனைத்து புறாக்களையும் பூனைகளையும் கொன்று தள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Hyesan மாகாணத்தில் ரகசியமாக பூனை ஒன்றை பாதுகாத்து வந்த குடும்பம் ஒன்றை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு அனுப்பியுள்ளனர் மாகாண நிர்வாகத்தினர்.
விசாரணையின் போது தங்களின் பூனை செத்துவிட்டதாக கூறிய நிலையில், திடீரென்று அந்த பூனை விசாரணை அதிகாரிகளின் பார்வையில் பட்டதே அந்த குடும்பத்தினரை தனிமைப்படுத்துதலுக்கு அனுப்ப காரணம் என கூறப்படுகிறது.
மட்டுமின்றி பூனையை ரகசியமாக பாதுகாத்த காரணத்தால் அவர்களுக்கு 20 நாட்கள் சிறைவாசமும் தண்டனையாக வழங்கியுள்ளனர்.
மேலும், இதுவரை எத்தனை பூனைகள், புறாக்களை கொன்று தள்ளினார்கள் என்ற கணக்கு வெளியாகவில்லை. பூனைகள் மற்றும் புறாக்களை கொல்ல சிறப்பு ரோந்து படைகளும் களமிறக்கப்பட்டுள்ளது.
இதனால் சீனா எல்லையில் அமைந்துள்ள வட கொரிய மாகாணங்கள் பரபரப்பில் காணப்படுகிறது.