பல கோடிகளுக்கு கைமாறிய பிரபல தமிழ்நாட்டு நிறுவனம்! அதிகாரத்தைக் கைப்பற்றிய பிர்லா குழுமம்
தமிழ்நாட்டை தலைமையிடமாகக் கொண்ட இந்தியா சிமெண்ட்ஸ், அண்மையில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கையகப்படுத்துதல், இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தி தொழில் துறையில் ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது.
இந்தியா சிமெண்ட்ஸ் பின்னணி
1946 இல் எஸ்.என்.என் சங்கரலிங்க அய்யர் என்பவரால் நிறுவப்பட்ட இந்தியா சிமெண்ட்ஸ்(india cements), தென்னிந்தியாவில் புகழ்பெற்ற சிமெண்ட் உற்பத்தியாளராக இருந்து வருகிறது.
இவர்களது முதல் சிமெண்ட் தொழிற்சாலை தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து என்ற கிராமத்தில் 1949ம் ஆண்டு நிறுவப்பட்டது.
முன்னாள் BCCI தலைவராக இருந்து வந்த என். ஸ்ரீனிவாசன் தலைமையிலான இந்த நிறுவனம், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் பரவலாக செயல்பட்டு வந்தது.
ரஷ்யா-கிழக்கு நாடுகள் மிகப்பெரிய இடையே கைதிகள் பரிமாற்றம்: யார் யார் விடுவிக்கப்பட்டுள்ளனர் தெரியுமா?
கையப்படுத்திய ஆதித்யா பிர்லா குழுமம்
ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம்(ultratech cement) கடந்த ஜூன் மாதம் பங்கு ஒன்றுக்கு ரூ.268 ரூபாய் என்ற விலையில் இந்தியா சிமெண்ட்ஸின் 7,05,64,656 பங்குகளை வாங்கி முதல் கைப்பற்றலை வாங்கியது.
இதையடுத்து 2வது முறையாக இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர்கள் மற்றும் இணை நிறுவனங்களிடம் இருந்து ஒரு பங்கிற்கு ரூ.390 என சுமார் 10,13,91,231 பங்குகளை ரூ.3954 கோடிக்கு ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.
அத்துடன் இது தொடர்பான ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திடப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக தற்போது இந்தியா சிமெண்ட்ஸின் 55% பங்கு உரிமையை பெற்று இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்தை ஆதித்யா பிர்லா குழுமம் கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்தில் இருந்தும், நிறுவனத்திலிருந்தும் அதன் நிறுவனத்தின் தலைவர் என்.ஸ்ரீனிவாசன் வெளியேறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |