ரஷ்யா-கிழக்கு நாடுகள் மிகப்பெரிய இடையே கைதிகள் பரிமாற்றம்: யார் யார் விடுவிக்கப்பட்டுள்ளனர் தெரியுமா?
ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 24 பிணைக் கைதிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பிணைக் கைதிகள் பரிமாற்றம்
ரஷ்யா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையில் பனிப்போர் காலத்திற்கு பிறகான மிகப்பெரிய பிணைக் கைதிகள் பரிமாற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மொத்தம் 24 கைதிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 கைதிகள் விடுவிக்கப்பட்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு நாடு திரும்பி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக உளவு வேலை பார்த்ததற்காக அமெரிக்கா, நார்வே, ஜேர்மனி, போலந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 8 ரஷ்ய கைதிகள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு கைதிகளின் குழந்தைகளும் இவர்களுடன் ரஷ்யாவிற்கு நாடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைதிகள் பரிமாற்றமானது வியாழக்கிழமை முன்பகுதியில் Ankara விமான நிலையத்தின் ஓடுபாதையில் நடைபெற்றது.
இவான் கெர்ஷ்கோவிச் விடுவிப்பு
இந்த பிணைக் கைதிகள் பரிமாற்றத்தின் போது 16 பேரில் ஒருவராக ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் Wall Street Journal-லின் செய்தியாளர் இவான் கெர்ஷ்கோவிச் (Evan Gershkovich) விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவருடன், அமெரிக்க கப்பல் படை வீரர் Paul Whelan, ரஷ்ய-அமெரிக்க செய்தியாளர் Alsu Kurmasheva மற்றும் அமெரிக்காவின் கிரீன் கார்டு அம்சத்தை வைத்துள்ள ரஷ்ய-பிரித்தானிய செயல்பாட்டாளர் Vladimir Kara-Murza ஆகியோர் அமெரிக்காவுக்கு நாடு திரும்பி வருவதாக ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |