Southport கத்திக்குத்து சம்பவம்: 17 வயது குற்றவாளியின் பெயர் வெளியானது!
பிரித்தானியாவின் Southport பகுதியில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய 17 வயது டீனேஜ் சிறுவனின் பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியான குற்றவாளியின் பெயர் விவரம்
பிரித்தானியாவில் Southport பகுதியில் நடந்த கொடூர கத்திக்குத்து சம்பவத்தில், சிறுவர்களுக்கான கோடைகால முகாமில் கலந்து கொண்ட 6 வயது Bebe King, 7 வயது Elsie Dot Stancombe மற்றும் 9 வயது Alice Dasilva Aguiar ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய 17 வயது டீனேஜ் சிறுவனின் பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆக்சல் முகன்வா ருடகுபனா (Axel Muganwa Rudakubana) என்ற அந்த 17 வயது சிறுவன் மீது 3 கொலை குற்றச்சாட்டுகளுடன் 10 கொலை முயற்சி தாக்குதல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் மீது சமையலறை கத்தியை உடன் வைத்திருந்த குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் Lancashire கிராமத்தை சேர்ந்த சந்தேக நபர், Liverpool Crown நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் தற்போது சிறுவர்கள் சீர்திருத்த மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி உத்தரவு
குற்றம் சுமத்தப்பட்டவரின் பெயர் விவரங்கள் அவரது வயது காரணமாக வெளியிடப்படாமல் இருந்த நிலையில், ஊடகங்களின் கோரிக்கை விண்ணப்பத்தை தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்டவரின் பெயர் விவரங்கள் வெளியிடலாம் என்று லிவர்பூல் நீதிபதி ஆண்ட்ரூ மெனரி கேசி உத்தரவிட்டார்.
அப்போது, குற்றம் சுமத்தப்பட்டவரின் பேரில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதை கவனத்தில் கொண்டாதாக தெரிவித்துள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டவர் அடுத்த வாரம் தனது 18 வயதை பூர்த்தி அடைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஆக்சல் முகன்வா ருடகுபனா Liverpool Crown நீதிமன்றத்தில் அக்டோபர் 25ம் திகதி விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |