சித்திரைப் புத்தாண்டு பிறக்கும் நேரமும் சங்கிரம தோஷ நட்சத்திரமும் - வாக்கிய பஞ்சாங்கம்
தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் தொடக்கமாகும். தமிழர்களுக்குரிய சிறப்பான பண்டிகைகளில் சித்திரையில் வரும் புத்தாண்டு சிறந்து விளங்குகின்றது.
புத்தாண்டு பிறந்தால் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் புதுமைகளும் பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும்.
குரோதி வருடம்
தமிழ் வருடங்கள் மொத்தமாக 60 காணப்படுகின்றது. அதில் தற்போது நடந்துக்கொண்டிருப்பது சோபகிருது வருடமாகும்.
நாளை மறுநாள் குரோத வருடமும் பிறக்கிறது. இந்தாண்டு மிகப் பெரியளவில் நன்மைகளும், சுப நிகழ்வுகள் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சித்திரை புத்தாண்டு அன்று மருத்து நீர் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிப்பாட்டில் ஈடுபட்டு பெரியவர்களிடம் இருந்து கைவிசேடம் வாங்கும் நிகழ்வு வரை ஒவ்வொன்றும் சுப நேரங்களில் நடைபெறும்.
அந்தவகையில் இந்த ஆண்டு எந்த நேரத்தில் எந்த செயலை செய்யலாம் என விரிவாக பார்க்கலாம்.
வருடம் பிறக்கும் நேரம்
13.04.2024 சனிக்கிழமை இரவு 08 மணி 15 நிமிடத்தில் குரோதி வருடம் பிறக்கின்றது.
மருத்து நீர் வைக்கும் நேரம்
13.04.2024 சனிக்கிழமை மாலை 04.15 முதல் நள்ளிரவு 12.15 வரை தேய்க்கலாம்.
தலை - ஆலிலை, கால் - புங்கை இலை, திசை வடக்கு.
கை விஷேடம் வழங்கும் நேரம்
14 ஆம் திகதி காலை 07.57 முதல் காலை 09.56 வரையில் வழங்கலாம்.
அல்லது
14 ஆம் திகதி காலை 09.59 முதல் நண்பகல் 12.01 வரையில் வழங்கலாம்.
அணியும் ஆபரணங்கள்
நீலக்கல் பதித்த அல்லது வைரக்கல் பதித்த ஆபரணங்களை அணியலாம்.
அணியும் ஆடைகள்
கபிலம் அல்லது வெள்ளை நிற ஆடையை அணியலாம்.
சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்
மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் (01ஆம், 02ஆம் பாதங்கள்), சித்திரை, விசாகம் (04ஆம் பாதம்), அனுஷம், கேட்டை, அவிட்டம்.
வியாபாரம், புதிய கணக்குகள் ஆரம்பிக்கும் நேரம்
15.04.2024 திங்கட்கிழமை காலை 09.08 தொடக்கம் காலை 09.51 வரை அல்லது அதே நாள் காலை 09.55 தொடக்கம் காலை 10.31 வரையில் ஆரம்பிக்கலாம்.
இந்த நேரத்தின் படி அனைத்து கருமங்களையும் செய்தால் இந்த ஆண்டு சிறப்பானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |