தினம் ரூ. 200 வைப்பு, வீட்டை தேடி வரும் ரூ. 28 லட்சம் - LIC இன் அடுத்த திட்டம் பற்றி தெரியுமா?
இந்தியாவில் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் திட்டங்களை வழங்குகிறது.
இது சிறிய சேமிப்பின் மூலமாக பெரிய நிதி திரட்ட உதவுகிறது. அத்தகைய ஒரு அற்புதமான திட்டமான LIC ஜீவன் பிரகதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் ஒவ்வொரு நாளும் ரூ.200 சேமிப்பதன் மூலம் ரூ.28 லட்சத்தைப் பெறலாம். நீங்கள் இந்த திட்டத்தில் இணைய விரும்புகின்றீர்கள் என்றால் சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் முறைகள் மற்றும் பலன்கள் பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
வயது வரம்பு
LIC ஜீவன் பிரகதி திட்டத்தின் முதலீட்டாளர்கள் பல நன்மைகளை பெறுவார்கள். ஒவ்வொரு நாளும் ரூ.200 சேமிப்பதன் மூலம் ரூ.28 லட்சம் நிதியை பெறலாம். இதில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 12 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அதிகபட்சமாக 45 வயதிற்குள் முதலீடு செய்யலாம்.
ரூ.28 லட்சம் எடுப்பது எப்படி?
இந்தத் திட்டத்தில் தினமும் ரூ.200 முதலீடு செய்தால், அவர் ஒரு மாதத்தில் ரூ.6000 முதலீடு செய்கிறார்.
இந்நிலையில், ஆண்டுக்கு வைப்பு செய்ய வேண்டிய தொகை ரூ.72,000 ஆக இருக்கும். இப்போது இந்தத் திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு வைப்பு செய்வதன் மூலம் நீங்கள் மொத்தம் ரூ.14,40,000 முதலீடு செய்வீர்கள். அதே நேரத்தில், அனைத்து நன்மைகளையும் சேர்த்து, நீங்கள் சுமார் 28 லட்சம் ரூபாய் நிதியைப் பெறுவீர்கள்.
தேவையான ஆவணங்கள்
இந்த திட்டத்தில் இணைவதற்கு குறிப்பிட்ட ஒரு சில ஆவணங்கள் தேவைப்படும். அதாவது ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தனிப்பட்ட தொலைப்பேசி இலக்கம், வங்கி Pass Book போன்றவை தேவைப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் முதலில் LIC அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.
பின் அங்கு விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்ய வேண்டும். அந்த விண்ணப்படிவத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து ஒரு தொகை பணத்துடன் LIC அலுவலகத்தில் ஓப்படைக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |