பிரான்சில் வெளிநாட்டவர்களைக் குறிவைத்து விநோத மோசடி: உஷார் குடும்பத்திடம் சிக்கினார் டெக்சி சாரதி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெளிநாட்டவர்களைக் குறிவைத்து மோசடி செய்யும் டெக்சி சாரதி ஒருவர், ஒரு உஷார் குடும்பத்திடம் சிக்கினார்.
62,000 யூரோக்கள் வரை மோசடி
Hauts-de-Seine என்னுமிடத்தில் வாழும் அந்த 30 வயது சாரதி, 71 சுற்றுலாப்பயணிகளை ஏமாற்றியுள்ளார். ஒன்லைன் மூலம் கட்டணம் செலுத்தக்கோரும் அந்த நபர், முதல் முறை ஏதோ தவறாகிவிட்டது, உங்கள் PINஐ உள்ளிடுங்கள் என சுற்றுலாப்பயணிகளிடம் கேட்பார்.
PINஐக் கொடுக்கும் சுற்றுலாப்பயணி, தன் சொந்த நாட்டுக்கு சென்று சேர்ந்த பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதையே கண்டுபிடிப்பார். அப்புறம் புகார் செய்வதற்காக என அவர் தனியாக விமான டிக்கெட் எடுத்து திரும்பவும் பாரீஸ் வருவாரா என்ன!
இந்த டெக்சி சாரதி அந்தப் பணத்தை அமுக்கிவிடுவார். விடயம் வெளியே வரவே வராது.
Photo by KENZO TRIBOUILLARD / AFP
விடயம் வெளியே வந்தது எப்படி?
ஸ்பெயின் நாட்டவர்களான ஒரு குடும்பம் பாரீஸுக்கு சுற்றுலா வந்துள்ளது. அவர்களிடம், 15.40 யூரோக்கள் கட்டணம் வாங்குவதற்கு பதில், 1,540 யூரோக்கள் ஏமாற்றி வாங்கியுள்ளார் அந்த சாரதி.
உடனடியாக அந்த உஷார் தம்பதி பொலிசாருக்கு தகவலளிக்க, பல நாள் திருடன் ஒருநாள் சிக்கிக்கொண்டார். அவரை ட்ராக் செய்து அவர் இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்துவிட்டனர் அந்தக் குடும்பத்தினர். தற்போது அந்த மோசடி சாரதி கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவரால் ஏமாற்றப்பட்ட மற்ற சுற்றுலாப்பயணிகளையும் பொலிசார் தொடர்புகொண்டு வருகிறார்கள்.