பாஜக ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜ்.. கூட்டணி வைத்தால் அதிமுகவுக்கு தான் இழப்பு: சீமான்
அதிமுகவுக்கு பாஜக ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்றும், அதிமுக, பாஜக கூட்டணி பிரிந்துள்ளதை வரவேற்கிறோம் என்றும் நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார்.
கூட்டணி முறிவு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இருந்தும் விலகுவதாகவும் அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பாஜக எக்ஸ்ட்ரா லக்கேஜ்
அதிமுக, பாஜக கூட்டணி விவகாரம் தொடர்பாக சீமான் கூறுகையில், "பாஜகவிலிருந்து அதிமுக பிரிந்தது மகிழ்ச்சிக்குரியது. பாஜகவிலிருந்து அதிமுக பிரிந்தால் நல்லது எனக் கூறியிருந்தேன். தற்போது, அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் எனக் கூறியதை கடைசி வரை பின்பற்றினார். அதன் பிறகு, பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது. பாஜக மற்றும் காங்கிரஸ் நம் இனத்திற்கும், நிலத்திற்கும் தேவையில்லை.
பாஜக தொங்கு சதை, எக்ஸ்ட்ரா லக்கேஜ். பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு இழப்புதான் ஏற்படும். பாஜகவை தூக்கி சுமக்கும் அவசியம் அதிமுகவுக்கு இல்லை. இது போன்ற துணிச்சலான முடிவை ஜெயலலிதா எடுத்திருந்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி காலம் தாழ்த்தி எடுத்துள்ளார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |