பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் கோடரியால் வெட்டிக்கொலை! தேர்தலுக்கு முன் பயங்கரம்
இந்திய மாநிலம் சத்தீஷ்காரில் பாஜக நிர்வாகி மாவோயிஸ்டுகளினால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான திகதியை சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி, சத்தீஷ்கர் மாநிலத்தில் வரும் 7 மற்றும் 17ஆம் திகதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஆனால் சில நாட்களுக்கு முன்பு தேர்தலில் யாரும் களமிறங்க கூடாது என மாவோஸ்யிஸ்டுகள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
ரத்தன் துபே
இந்த நிலையில், நாராயண்பூர் மாவட்ட பாஜக துணைத் தலைவரான ரத்தன் துபே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.
கவுஷல்நார் பகுதியில் உள்ள சந்தைக்கு ரத்தன் துபே வாக்கு சேகரிக்க சென்றபோது, மாவோயிஸ்ட்டுகள் அவரை கோடரியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
கொடூரமான தாக்குதலுக்கு ஆளான அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் ரத்தன் துபேயின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |