50 காங்கிரஸ் MLA-க்களுக்கு தலா ரூ.50 கோடி பேரம் பேசிய பாஜக.., சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சியான பாஜக, 50 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி வழங்க பேரம் பேசியுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
சித்தராமையா பேசியது
கர்நாடகா, மைசூருவில் டி நரசிபுரா சட்டமன்றத் தொகுதியில் ரூ.470 கோடி மதிப்பிலான பொதுப்பணித் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், "பாஜக எனது அரசை சீர்குலைக்க முயற்சித்தது. 50 எம்.எல்.ஏ.க்களுக்கு 50 கோடி ரூபாய் வழங்குவதாக பாஜக கூறியுள்ளது. இந்தப் பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
முன்னாள் முதலமைச்சர்களான பிஎஸ்ஒய் (பிஎஸ் எடியூரப்பா) மற்றும் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா பணத்தை அச்சடிக்கிறார்களா?
இது ஊழல் பணம், அவர்களிடம் கோடிகள் உள்ளன. இதை பயன்படுத்தி எம்எல்ஏக்களை ரூ.50 கோடிக்கு வாங்க முன்வந்தார்கள். ஆனால், எங்கள் எம்.எல்.ஏ.க்கள் அதனை ஏற்கவில்லை.
எனவே தான் இந்த அரசை அகற்ற வேண்டும் என்று பொய் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். மேலும், என் மீது பொய் வழக்குகள் பதிவு செய்கின்றனர்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |