பா.ஜ.க அலுவலகத்தில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு! சதி உள்ளதாக கட்சி தலைவர் அண்ணாமலை பேட்டி.. நேரலை வீடியோ
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வினோத் என்ற நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பற்றி என்ஐஏ விசாரணை தேவை.
இதற்கு பின் வேறு பெரிய காரணம் இருப்பதாக பாஜக சந்தேகிக்கிறது. குண்டுவீச்சு சம்பவத்தில் மிகப்பெரிய சதி உள்ளது இதனை விரிவாக விசாரிக்க வேண்டும் என கூறிய அவர், தடயத்தை காவல்துறை அழித்துள்ளதாக தெரிவித்தார்.
நீட் தேர்வை பாஜக ஆதரிப்பதால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நகைச்சுவையாக உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக என்னுடைய பாதுகாப்பைக் குறைத்தார்கள். எனக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு சட்டென குறைக்கப்பட்டது என தெரிவித்தார்.
அண்ணாமலை செய்தியாளர்களை சந்திக்கு நேரலை வீடியோ கீழே,