ஆளுக்கு ரூ.15 லட்சம் என்ற பாஜகவின் வாக்குறுதி? 'Speaking for INDIA' தலைப்பில் தமிழக முதல்வர் கேள்வி
தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை என்று இந்தியாவின் குரல் என்ற தலைப்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
இந்தியாவின் குரல்
இந்தியாவின் குரல் (Speaking for INDIA) என்ற தலைப்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய ஆடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆடியோவானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆடியோ http://speaking4india.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பாஜகவின் ரூ.15 லட்சம் வாக்குறுதி என்ன ஆனது?
இந்தியாவின் குரல் என்ற ஆடியோவில் பேசிய முதலமைச்சர்,"இந்தியாவுக்காக எல்லோரும் பேசி ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். காலம் காலமாக இந்திய மக்கள் அனைவரும் போற்றி பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாஜக முயற்சி செய்கிறது.
ஆட்சிக்கு வந்த பாஜக, தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு வந்து ஆளுக்கு ரூ. 15 லட்சம் தருவோம். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம்.
உழவர்களின் வருமானத்தை ரூ.2 கோடி ஆக்குவோம். சொந்த வீடு இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள். இந்தியா, 5 ட்ரில்லியன் பொருளாதார நாடாக மாறும். பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டியலிட்ட பின், குஜராத் மாடல் அரசை பற்றி மறந்தும் கூட பேசுவதில்லை. ஜிஎஸ்டி (GST) மூலம் மாநில வருவாய் பறிக்கப்படுகிறது" என்றார்.
வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம்! #Speaking4India pic.twitter.com/C60TrlPTOG
— M.K.Stalin (@mkstalin) September 4, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |