10 கோடி ஆண்டுகளுக்கு பிறகு உயிர்த்தெழுந்த கருந்துளை: இந்திய விஞ்ஞானிகள் சாதனை
10 கோடி ஆண்டுகளுக்கு பிறகு உயிர்த்தெழுந்த கருந்துளையை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கண்விழித்த கருந்துளை
பிரபஞ்சத்தில் கிட்டத்தட்ட 10 கோடி ஆண்டுகளாக செயலற்று தூங்கிக் கொண்டிருந்த மிகப்பெரிய கருந்துளை(Black Hole) திடீரென உயிர்த்தெழுந்துள்ளது.
இந்த அரிய நிகழ்வின் போது வெடித்து சிதறிய கருந்துளையில் இருந்து பல மில்லியன் ஒளி ஆண்டுகள் நீளத்திற்கு பிளாஸ்மா துகள்கள் வெளியேறி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வானது J1007+3540 என்ற ரேடியோ விண்மீன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்திய விஞ்ஞானிகள் சாதனை
பிரபஞ்சத்தின் இந்த அதிசயமான நிகழ்வை இந்தியாவின் Giant Metrewave Radio Telescope என்ற தொலைநோக்கியின் உதவியுடன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சியாளர் ஷோபா குமாரி, இந்த நிகழ்வை மறுபிறப்பு என்று அழைக்கிறார்.

இந்த கருந்துளை நிகழ்வு நீண்ட அமைதிக்கு பிறகு பிரகாசமான மற்றும் வலிமையான ஆற்றலை விண்வெளியின் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |