பொலிஸ் காவலில் மரணமடைந்த இளைஞர்... பிரான்ஸ் நிர்வாகம் விதித்த அதிரடி தடை உத்தரவு
பிரான்சில் பொலிஸ் காவலில் மரணமடைந்த கருப்பின இளைஞர் தொடர்பில் நினைவஞ்சலி கூட்டங்களுக்கு நிர்வாகம் அதிரடி தடை விதித்துள்ளது.
நீதிமன்றத்தை நாடும் நிலை
குறித்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சட்டத்தரணிகள் நீதிமன்றத்தை நாடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அல்ஜீரிய வம்சாவளி இளைஞர் 17 வயது நஹெல் பொலிஸ் வன்முறைக்கு கொல்லப்பட்ட நிலையில், ஏற்பட்ட தொடர் வன்முறை சம்பவங்களால் அரசாங்கம் தள்ளாடி வருகிறது.
@reuters
6 நாட்கள் நீடித்த போராட்டங்களின் போது 23,000 பகுதிகளில் நெருப்பு வைத்துள்ளனர். இளைஞர்கள் பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர். 12,000 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
2,000 பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அங்காடிகள் வணிக வளாகங்கள் பல கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2016ல் பொலிஸ் காவலில் மரணமடைந்த கருப்பின இளைஞர் 24 வயதான அதாமா Traoré என்பவர் தொடர்பில் நினைவஞ்சலி கூட்டங்களுக்கு அனுமதி கோரியிருந்த நிலையில், தற்போது பிரான்ஸ் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
@AFP
நீதியை மறுப்பதற்கு ஒப்பாகும்
தற்போதைய சூழலில் இவ்வாறான நினைவஞ்சலி கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதால், அது வன்முறையில் முடியலாம் என்றே அஞ்சப்படுகிறது. சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த அமைதி பேரணிக்கு தடை விதிப்பது என்பது நீதியை மறுப்பதற்கு ஒப்பாகும் என குறிப்பிட்டுள்ள ஆதரவாளர்கள், கடந்த 7 ஆண்டுகளாக அமைதியான முறையில் பேரணி நடத்தப்பட்டு வந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
@reuters
Traoré விவகாரத்தில் இதுவரை எந்த வழக்குகளும் பதியப்படவில்லை என்பதுடன், குடும்பத்தினரே நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்பட்டது. இளைஞர் Traoré தொடர்பில் நினைஞ்சலி பேரணி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றே பல அமைப்புகளும் தற்போது கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |