9.43 டிரில்லியன் சொத்து மதிப்பு: அம்பானி கைகோர்க்க இருக்கும் வருங்கால கூட்டாளி யார்?
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களின் ஒருவராக பார்க்கப்படும் முகேஷ் அம்பானி வருங்காலத்தில் 9.43 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க நிறுவனத்துடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பெரு நிறுவனத்துடன் கைகோர்க்கும் அம்பானி
உலக அளவில் மிகப்பெரிய முதலீட்டு மேலாண்மை நிறுவனமாக பார்க்கப்படும் அமெரிக்காவின் பிளாக்ராக் முதலீட்டு மேலாண்மை நிறுவனம்(Blackrock Inc) 2018ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறியது.
ஆனால் தற்போது இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கைகோர்ப்பதற்காக இந்தியாவிற்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Reliance Chairman Mukesh Ambani
அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிளாக்ராக் முதலீட்டு நிறுவனத்தால் பயனடைய இருக்கிறது, மேலும் அவர்கள் 50:50 சதவீதம் என்ற கூட்டாண்மையில் கைகோர்க்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போதைய மதிப்பீட்டின் படி, ரூ.1.66 லட்சம் கோடி மதிப்பு கொண்டுள்ளது.
பிளாக்ராக் நிறுவனத்தின் சொத்து மதிப்பு
பிளாக்ராக் நிறுவனம் 1988ம் ஆண்டு லாரி ஃபிங்க்(Larry Fink) என்பவரால் நிறுவப்பட்டது, ஜூனில் பிளாக்ராக் நிறுவனத்தின் நிதி மேலாண்மைக்கு கீழ் தற்போது 9.43 டிரில்லியன் சொத்து மதிப்புகள் உள்ளது.
இது இந்தியாவின் GDP-யில் மூன்று மடங்கு ஆகும், அத்துடன் இந்த நிறுவனம் உலகின் 10 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது, இது உலகின் மிகப்பெரிய நிழல் வங்கியாக பார்க்கப்படுகிறது.
Jeenah Moon/Bloomberg
பிளாக்ராக் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் 6.5 சதவீத பங்குகள், மெட்டா நிறுவனத்தின் 6.5 சதவீத பங்குகள் மற்றும் ஆல்பாபெட் Inc நிறுவனத்தின் 4.5 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.
பிளாக்ராக் நிறுவனம் தற்போது அரசு நிதிகளையும் மேலாண்மை செய்து வருகிறது, கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்கா பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்த போது பிளாக்ராக் நிறுவனம் மிகப்பெரிய உதவியை மேற்கொண்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவியது.
யார் இந்த லாரி ஃபிங்க்
ஃபோர்ப்ஸ் தகவல்படி, பிளாக்ராக் நிறுவனத்தை நிறுவிய லாரி ஃபிங்க் நிகர சொத்து மதிப்பு சுமார் 8200 கோடியாகும். இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்று, தன்னுடைய 23வது வயதில் வங்கியில் பணி புரிந்து வந்துள்ளார்.
Larry Fink, Founder and Head of Blackrock Hedge Fund
31வது வயதில் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக முன்னேற்றம் அடைகிறார், ஆனால் அப்போது 10 கோடி அமெரிக்க டொலரை இழந்ததற்காக பணி நீக்கம் செய்யப்படுகிறார்.
இதையடுத்து தன்னுடைய 35வது வயதில் சொந்த நிறுவனத்தை லாரி ஃபிங்க் தொடங்கிறார்.
5 வருடங்களில் அந்த நிறுவனம் 20 பில்லியன் டொலர் நிறுவனமாக அசுர வளர்ச்சி அடைந்து அனைவரையும் ஈர்க்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |