அமெரிக்க தூதரகம் அருகே பயங்கர வெடிப்பு: மோப்ப நாய்களுடன் களமிறங்கிய நார்வே அதிகாரிகள்
நார்வேயில் அமெரிக்க தூதரகம் அருகில் வெடிப்பு சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க தூதரகம் அருகே வெடிப்பு
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமெரிக்க தூதரகத்திற்கு மிக அருகில் சக்தி வாய்ந்த வெடிப்பு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
மத்திய கிழக்கில் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் போது இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனுடன் நேரடி தொடர்பு உள்ளதா என்பதை இப்போதே கூற முடியாது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
🚨 JUST IN: Norway police CONFIRM that the US Embassy is Oslo was targeted by an EXPLOSIVE DEVICE, detonating around 1AM near the entrance
— Eric Daugherty (@EricLDaugh) March 8, 2026
Minor injuries and damage reported
We're facing Islamic TERROR CELLS worldwide. Keep Americans safe at all costs!pic.twitter.com/6jzHlu9Kmv
அதிகாலை 1 மணியளவில் நடந்த இந்த வெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணை தீவிரம்
சம்பவ இடத்தில் அதிகாரிகள் மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவி கொண்டு தீவிரமான ஆய்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
புலனாய்வு அதிகாரிகள், இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் இதற்கு காரணமானவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆஸ்லோ அதிகாரிகள் அமெரிக்கா தூதரக அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து இந்த விவகாரத்தை கையாண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |