UAE-இருந்து புறப்பட்ட விமானம்: ஈரானில் கேட்ட அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சத்தங்கள்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள தெற்கு ஈரான் பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து கேட்ட வெடிப்புச் சத்தங்கள்
வியாழக்கிழமை தெற்கு ஈரானின் முக்கிய பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெடிப்பு சத்தங்கள் தெற்கு ஈரானின் பண்டார் அப்பாஸ் மற்றும் கெஷ்ம் தீவு ஆகிய பிரதான இரண்டு இடங்களில் பதிவாகி இருப்பதாக ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB தகவல் தெரிவித்துள்ளது.
ஈரானில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறிய அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து எரிபொருள் நிரப்பும் விமானங்கள் புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருள் விமானம் கிளம்பியதற்கும், ஈரானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பிற்கும் சம்பந்தம் உள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
அதே நேரத்தில் இந்த குண்டுவெடிப்பில் ஏற்பட்டுள்ள சேதங்களோ அல்லது மனித உயிரிழப்புகளோ குறித்தும் ஈரான் அதிகாரிகள் எந்தவொரு தகவலை வழங்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |