மாகாணத்தை உலுக்கிய பயங்கர வெடி விபத்து.. நூற்றுக்கணக்கானோருக்கு நேர்ந்த நிலை! வெளியான பதற வைக்கும் காட்சி
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் இராணுவ தளம் ஒன்று தொடர்ந்து பயங்கரமாக வெடித்து சிதறி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Zhambyl மாகாணத்தில் உள்ள இராணுவ தளத்திலே இந்த பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து கஜகஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் Nurlan Yermekbayev கூறியதாவது, வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த இராணுவ தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்கும் பணியில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, தீ வேகமாக பரவியதால் வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறியது, தொடர்ந்து சுமார் 10 முறை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
#Kazakhstan
— Barbara (@BGarattini) August 26, 2021
A series of explosions occurred following a fire that broke out at a military facility in the southern Zhambyl province. 60 people have been hospitalised as a result of the blast, at least 30 of them being military personnel. pic.twitter.com/5yEIVXL8j6
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் பலியாகினர், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இராணுவ தளத்தில் எதனால் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என கஜகஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் Nurlan Yermekbayev தெரிவித்துள்ளார்.
.2019ம் ஆண்டு Arys நகரில் உள்ள தளத்தில் இதே போன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர், இதைத்தொடர்ந்து அங்கிருந்து கொண்டு வரப்பட்ட வெடிபொருட்கள் Zhambyl மாகாணத்தில் உள்ள இராணுவ தளத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இங்கும் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தை தொடர்ந்து அருகில் உள்ள பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் மாகாணத்தை அல்மாட்டியின் மிகப்பெரிய நகரத்துடன் இணைக்கும் முக்கிய சாலையை அதிகாரிகள் மூடியுள்ளனர்.