தேர்தலுக்கு முந்தைய நாள்... 24 பேர்களை பலிவாங்கிய இரட்டை குண்டுவெடிப்பு
பாகிஸ்தானில் வியாழக்கிழமை பொதுத்தேர்தல் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் இருவரது அலுவலகங்களுக்கு அருகாமையில் வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டசின் கணக்கானோர்
குறைந்தது 24 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் டசின் கணக்கானோர் காயங்களுடன் தப்பியதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம், தேர்தல் நாளில் பாதுகாப்பு தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
@reuters
சமீப மாதங்களில் தீவிரவாத தாக்குதல், கடும் பொருளாதார சிக்கல் மற்றும் நாட்டின் முக்கிய தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் சிறையில் அடைப்பு உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் வியாழக்கிழமை பொதுத்தேர்தலை எதிகொள்ள இருக்கிறது.
இந்த நிலையில், இரண்டு இடங்களில் வெடிகுண்டு வெடித்துள்ளதை அடுத்து பாதுகாப்பை பலப்படுத்துவோம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@reuters
பின்னனியில் இருப்பவர்கள்
Pishin மாவட்டத்தில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் 14 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாவது தாக்குதலானது ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள Qilla Saifullah பகுதியில் நடந்துள்ளது.
இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னனியில் இருப்பவர்கள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
@reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |