பார்வை இல்லாதது தான் என் பலம்! எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு வரலாறு படைத்த இந்திய பெண்
பார்வையற்ற இந்திய பெண்ணொருவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து வரலாறு படைத்துள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னோர் மாவட்டத்திலுள்ள சாங்கோ எனும் சிறிய கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்ணான சொன்சின் அங்க்மோ (Chhonzin Angmo), உலகின் மிக உயரமான மலைச் சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் மீது இந்திய தேசியக்கொடியை நட்டுள்ள முதல் பார்வையற்ற இந்திய பெண் என்கிற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
8 வயதில் பார்வை இழந்த அங்க்மோ, டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுசில் பட்டமும் முதுநிலையும் முடித்துள்ளார். தற்போது யூனியன் வங்கியில் கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட்டாக பணியாற்றுகிறார்.
"பார்வையின்மையில் தான் என் பலம் இருக்கிறது" என தைரியமாக கூறும் அவர், "என் பயணம் இனிதான் ஆரம்பமே" எனத் தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.
2024 அக்டோபரில் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் சென்று, அதையும் வெற்றிகரமாக கடந்தவர். லடாக் பகுதியில் உள்ள காங் யட்சே 2 போன்ற சவாலான சிகரங்களையும் வென்றுள்ளார்.
Operation Blue Freedom திட்டத்தின் கீழ் 2021-இல் பங்கேற்ற அவர், உலகின் மிக உயர்ந்த போர்க்களமாக சியாச்சின் பனிப்பாறையும் கடந்தார்.
அவரது சாதனைகள் பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' நிகழ்ச்சியிலும் பாராட்டப்பட்டுள்ளன. சர்வஷ்ரேஷ்ட திவ்யாங்ஜன் தேசிய விருது (Sarvshresth Divyangjan National Award) உள்ளிட்ட பல பாராட்டுகளும் பெற்றுள்ளார்.
அங்க்மோவின் துணிச்சல், இந்திய பெண்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் ஊக்கமளிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Chhonzin Angmo Everest Achievement, Blind Indian Woman Everest, Divyang Mountaineer India, Chhonzin Angmo Everest, First blind Indian woman Mount Everest, Blind mountaineer India, Divyang Everest success, Operation Blue Freedom, Himachal Everest climber, Indian woman on Everest, Blind achievers India, Disability empowerment India