புடின் மற்றும் ஐரோப்பா தொடர்பில் வங்கா பாபா கணித்துள்ள சில்லிடவைக்கும் விடயங்கள்
எதிர்காலம் குறித்த பல்கேரிய நாட்டவரான வங்கா பாபாவின் கணிப்புகள் குறித்து பலரும் அறிந்திருக்கலாம்.
1996ஆம் ஆண்டிலேயே மரணமடைந்தாலும், இளவரசி டயானாவின் மரணம், இரட்டைக்கோபுர தாக்குதல் முதல், பிரெக்சிட் வரை துல்லியமாக கணித்தவர் பாபா வங்கா.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டில், புடின் மற்றும் ஐரோப்பா தொடர்பில் வங்கா பாபா கணித்துள்ள சில விடயங்கள் சில்லிட வைப்பவையாக அமைந்துள்ளன.
உலகின் பிரபு புடின்
புடின் உலகின் பிரபுவாக ஆவார் என வங்கா பாபா கணித்துள்ள நிலையில், புடினுடைய நடவடிக்கைகளைப் பார்த்தால், அவர் உண்மையாகவே போரை முடிவுக்குக் கொண்டுவருவதுபோல் தெரியவில்லை.
இளவேனிற்காலத்தில் கிழக்கில் ஒரு போர் துவங்கும், மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று கூறியுள்ள வங்கா பாபா, கிழக்கில் தோன்றும் அந்தப் போர் மேற்கை அழித்துவிடும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், புடின் உலகின் பிரபு ஆவார் என்றும், ஐரோப்பா தரிசு நிலமாக மாறிவிடும் என்றும் கூறியுள்ளார் பாபா.
அத்துடன், ரஷ்ய உக்ரைன் போரின் முடிவு என்னவாக இருக்கும் என்றும் ஏற்கனவே கணித்துள்ளார் பாபா.
ரஷ்யா பிழைத்துக்கொள்வது மட்டுமல்ல, அது உலகின் மீது ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாறிவிடும் என்றும் கூறியுள்ளார் பாபா.
இந்நிலையில், நான்கு நாடுகள் போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என பிரித்தானிய முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஒருவர் ஏற்கனவே எச்சரித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |