BMW-வின் புதிய EV: Electric Mini Countryman அறிமுகம்., விலை என்ன?
ஜேர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW நிறுவனம், இந்தியாவில் பல எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கியுள்ளது.
அதில் ஒன்றாக, BMW அதன் Electric Mini Countryman எனும் மின்சார-காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
BMW-வின் புதிய எலக்ட்ரிக் மினி கன்ட்ரிமேனின் விலை ரூ.54.9 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கார் பேட்டரிக்கு எட்டு ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கிலோமீட்டர் Warranty-யுடன் வருகிறது.
எலக்ட்ரிக் மினி கன்ட்ரிமேன் வெறும் 8.6 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 462 கிமீ பயணிக்கும். வெறும் 29 நிமிடங்களில் பேட்டரி 80 சதவீதம் வரை ரீசார்ஜ் செய்யப்படும்.
இரண்டு ஏர்பேக்குகள், டைனமிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், க்ராஷ் சென்சார், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் பிரேக் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா, டியூப்லெஸ் டயர்கள் போன்ற அம்சங்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது தலைமுறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரின் முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள நிறுவனத்தின் டீலர்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் டெலிவரி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதவிர ரூ.44.9 லட்சம் விலையில் Mini Cooper S மாடலும் வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |